ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி
விவசாயத் தொழில்
விவசாய நிதி (சிறு தவணை கடன்)
- கிசான் கடன் அட்டையுடன் பயிர் கடன்
- பி.எஸ்.எல் தங்க கடன் திட்டம்
- கோடோன் இரசீதுக்கான நிதி
- பயிர் பெறுவதற்கு எதிரான கடன்கள்
விவசாய நிதி (தவணை கடன்கள்)
- பண்ணை இயந்திரமயமாக்கல்
- கிணறுகளுக்கு நிதியளித்தல்
- சிறு பாசனத் திட்டங்களுக்கு நிதியளித்தல்
- இறைப்பு பாசனத் திட்டங்கள்
- நிலம் வாங்குவதற்கான கடன்கள்
- நில மேம்பாட்டிற்கான கடன்கள்
- தோட்டக்கலை மற்றும் வனவியல் மேம்பாட்டு கடன்கள்
- மாட்டு வண்டிகள் மற்றும் எருது ஜோடிகளுக்கான கடன்கள்
- விவசாயிகளுக்கு இருசக்கர வாகனக் கடன்
- சாண எரிவாயு கடன்
வேளாண் சார்ந்த தொழில்கள்
- பால் பண்ணை கடன்கள்
- கோழிப் பண்ணை
- செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பிற்கான கடன்கள்
- மீன் வளர்ப்பிற்கான கடன்
- பன்றி வளர்ப்பிற்கான கடன்
- பட்டுப்புழு உற்பத்திக்கான கடன்
- தேனீ வளர்ப்பு மது மக்சிகா பலன்
விவசாயத்திற்கு மறைமுக நிதியளித்தல்
- சேமிப்பு நிலையங்கள் கட்டமைப்பு மற்றும் நடத்துவதற்கும் கடனுதவி வசதிகள்
23. விவசாய மருந்தகம் மற்றும் விவசாய வர்த்தக நிலையங்கள் (ACABC)
24. முகவர்களுக்கு நிதியளிக்கும் திட்டம்
25. வேளாண்மையில் உள்ள நவீன தொழில்நுட்பத் திட்டங்கள்
- கூட்டுப் பண்ணையம்
- நிதி நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல் (MFI)
- இதரத் தகவல்கள்
ஆதாரம் : http://www.idbi.com
1. கிசான் கடன் அட்டையுடன் பயிர் கடன்
விவசாயிகளுக்கு கடன் / குழுவாக இருக்கும் விவசாயிகளுக்கு பயிர் கடன் அல்லது முதலீட்டுப் பணம் அல்லது முதலீட்டுக் கடன் ஆகியவை விவசாயத் தேவைகளுக்காக வழங்கப்படும்.
தகுதி
அனைத்து விவசாயிகள் / சொந்தமாக நிலம் வைத்திருப்போர், வாடகைக்கு நிலம் வைத்திருப்போர், நிலத்தில் வரும் வருவாயைப் பங்கீடு செய்து கொள்ளும் விவசாயிகள் / தனிப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வோர்.
வெளியிடும் அளவு
பயிரைப் பொருத்து கே.சி.சி - யின் விதிகள் படியும் நிதியின் அளவீடுகள் வழங்கப்படும்.
காலம்
அட்டை 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இதில் பயிர் கடன் மற்றும் முதலீட்டுப் பணம் வருடத்திற்கு ஒரு முறை மறு ஆய்வு செய்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள் பெற அழுத்தவும்.
2. PSL தங்க கடன் திட்டம்
விவசாயிகளுக்கு சாகுபடித் தேவைகள், சமூக கடமைகள், மருத்துவ அவசரத் தேவைகள், சிறு தொழில்கள் / வர்த்தகர்கள் / விற்பனையாளர்கள் மற்றும் சுய வேலை செய்யும் தொழில்நுட்பங்கள் ஆகியோருக்கு வர்த்தகத் தேவைகளுக்கு தங்கத்தை அடமானம் வைத்து தற்காலிக நிதி உதவி வழங்குதல்.
வெளியிடும் அளவு
தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் அதிகபட்சம் 5 லட்சம்
காலம்
குறைந்தபட்சம் 1 மாத காலம் மற்றும் அதிகபட்சமாக 24 மாதங்கள்.
விண்ணப்பப்படிவங்கள் பெற அழுத்தவும்.
3. கோடோன் இரசீதுகளுக்கான நிதி
வங்கிகள் விவசாயிகள், கூட்டு நிறுவனங்கள், லிமிடெட் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு விவசாய வர்த்தகப் பொருட்களை வைத்துப் பெறப்படும் இரசீதுகளுக்கு எதிராக கடன் உதவிகள் வழங்குகிறது. விவசாயிகள் அறுவடை செய்தவுடன் குறைந்த விலைக்கு விற்பதைத் தடுக்க கோடோன்களில் சேமித்து வைத்து விற்க நினைப்பவர்கள், செயல்கள் / வர்த்தகர்கள் அந்தப் பயிரின் பருவகாலத்தில் அதிக அளவில் வாங்கி வைத்து பின் செயலாக்கம் செய்ய நினைப்போர் / சிறிது காலம் வைத்துப் பின் விற்பனை செய்ய விரும்புவோர், பெரிய செயலிகள் அமைத்துப் பொருட்களை தேவையான அளவு சேமித்து பிற்காலத்தில் விற்பனை செய்ய விரும்புவோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
தகுதிகள்
தனிநபர் விவசாயிகள், கூட்டு நிறுவனங்கள், லிமிடெட் நிறுவனங்கள்
தகுதியுள்ள பொருட்கள்
சோயா மொச்சை (பேல்களுடன் சேர்த்து), கடுகு, மக்காச்சோளம், கோதுமை, நெல், சர்க்கரை, முந்திரி, ஆமணக்கு, மிளகாய் மற்றும் மஞ்சள்.
காலம்
அதிகபட்சம் 12 மாதங்கள். பொருட்களை வைக்கும் நாளில் இருந்து அல்லது பொருளினைத் தாங்கும் நிலையைப் பொருத்து.
4. பயிர் பெறுவதற்கு எதிரான கடன்கள்
வங்கிகள் விவசாயிகள் பொருட்களுக்கு எதிராக சரியான நேரத்தில் கடன் வசதிகள் குறைந்தபட்ச பதிவுகளை பதப்படுத்தாத பயிர் பொருட்களைத் தனியார் மற்றும் பொதுத்துறை லிமிடெட் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
தகுதி
தனிப்பட்ட விவசாயிகள், குழு விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், குழு விவசாயிகளுக்காக வேலை செய்யும் முகவர்கள்.
தகுதியுள்ள பயிர்கள்
இத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட பயிர்களின் அட்டவணையில் உள்ள பயிர்களான தானியங்கள், பணப்பயிர்கள், பழங்கள், பூக்கள், மருத்துவ / வாசனைப் பயிர்கள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் விதைகள்.
கடன் அளவு
நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 1 கோடி, அதிகபட்சம் ரூ. 100 கோடி.
கடன் விண்ணப்பப் படிவங்கள் பெற அழுத்தவும்.
5. பண்ணை இயந்திரமயமாக்கல்
பண்ணை இயந்திரங்கள் / பாசன உபகரணங்கள் விவசாய வேலைகள் செய்வதற்கு, வாங்குவதற்கு கடன் வசதிகள் வழங்கப் படுகின்றது. இத்திட்டத்தில் உழவு உந்து மற்றும் அதன் பயன்பாடுகள், பவர் டில்லர்கள், கூட்டு அறுவடை இயந்திரங்கள், தெளிப்பான்கள், கதிர் அடிக்கும் இயந்திரம், துகள் தெளிப்பான்கள் ஆகியவை.
தகுதி
பம்புசெட் இயந்திரம் / பாசன உபகரணங்களுக்கு விவசாயிகள் குறைந்தபட்சம் பாசன நிலம் 2 ஏக்கர் வைத்திருத்தல் வேண்டும். பண்ணை இயந்திரங்களுக்கு கீழ்க்கண்டவை குறைந்தபட்ச பாசன நிலங்கள் ஆகும்.
- பவர் டில்லர்கள் - 2 ஏக்கர்கள்
- 35 குதிரைத் திறன் வரை கொண்ட உழவு உந்து வண்டிக்கு - 4 ஏக்கர்கள்
- 35 குதிரைத் திறனுக்கு மேல் கொண்ட உழவு உந்து வண்டிக்கு - 6 ஏக்கர்கள்
- கூட்டு அறுவடை இயந்திரங்களுக்கு - 8 ஏக்கர்கள்
கடன் தொகை
குறைந்தபட்சம் - ரூ. 30,000 /-
அதிகபட்சம் - ரூ. 30 லட்சம்
கடன் விண்ணப்பங்கள் பெற அழுத்தவும்.
6. கிணறுகளுக்கு நிதியளித்தல்
இந்தியாவில் கிணற்று முறை பாசனம் மிகப் பெரிய ஆதாரம் : வங்கிகள் வெவ்வேறு தேவைகளுக்கு கடன் உதவி வழங்குகிறது. அவை
- புதிய கிணறுகள் தோண்டுதல்
- இருக்கின்ற கிணறுகளை ஆழப்படுத்துதல் / சீரமைத்தல்
- ஆழ்குழாய் / குழாய் கிணறு
சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் அனைவரும் இதற்குத் தகுதியானவர்கள். நபார்டு வங்கி பரிந்துரைக்கும் நிறுவன செலவு கடன் தொகையை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடன் விண்ணப்பங்கள் பெற அழுத்தவும்.
7. சிறு பாசனத் திட்டங்களுக்கு நிதியளித்தல்
வங்கிகள் நிலத்தடி நீர் மட்டத்தை எடுப்பதற்கு நிதி உதவி வழங்குகிறது. அதோடு நீர் இறைக்கும் இயந்திரங்கள், நீர் பரப்பும் ஏற்பாடுகள் அனைத்திற்கும் வழங்கப்படும். இதற்கான இலக்கு அனைத்து வகையான விவசாயிகள் (சிறு / குறு / இதர விவசாயிகள்) தனியாகவோ அல்லது நிலத்தின் கூட்டு உரிமையாளருடன் இணைந்து செய்வோருக்கு வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் பெற அழுத்தவும்.
8. இறைப்பு நீர்ப் பாசனத் திட்டங்கள்
குழு விவசாயிகள், இறைப்பு பாசன சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெறலாம். குறைந்தது 5 நபர்கள் ஒன்றாக சேர்ந்து பாசனச் சங்கம் அமைத்து நிதி உதவிக்கு வங்கியை அனுகலாம்.
விண்ணப்பப்படிவம் பெற அழுத்தவும்.
9. நிலம் வாங்குவதற்கான கடன்
நிலங்களை ஒன்றாக்குவதற்கு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவணை கடன் ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை தனிநபர், குறு விவசாயிகள் / நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் / நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில், பாதியை அதன் நில உரிமையாளரிடம் கொடுப்பவர்கள். கடன்கள் தனிப்பட்ட விவசாயிகளுகக்குக் கொடுத்து சிறு மற்றும் குறு அளவில் நிலம் வைத்திருக்கும் நபர்களுக்கு பொருளாதார ரீதியில் மேம்படும் வகையிலும், தரிசு நிலங்களை சாகுபடி நிலமான மாற்றி விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் மேம்படும் படி மாற்றம் செய்தல் வேண்டும். கடன்கள் நீண்ட கால தவணை முறையாகவும், அதிகபட்சம் 9 வருடங்கள் மற்றும் 2 வருடங்கள் தாமதமாக செலுத்துவதும் அடங்கும்.
விண்ணப்பப்படிவங்கள் பெற அழுத்தவும்.
10. நில மேம்பாட்டிற்கு கடன் வழங்குதல்
நில மேம்பாடு என்பது தரிசு நிலம் அல்லது வீண் நிலத்தை சாகுபடி செய்யும் நிலமாக மாற்றிக் கொள்வது. இதில் நிலம் சமன் செய்தல், நிலத்தை சீரமைத்தல் ஆகியவை செய்யப்படும். தனிப்பட்ட விவசாயி திருப்பிச் செலுத்தும் பதிவுகள் நன்றாக வைத்திருத்தல் வேண்டும். கடன் அளவு என்பது பொறியாளர்கள் வழங்கும் சான்றிதழ் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவிற்கு வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவங்கள் பெற அழுத்தவும்.
11. தோட்டக்கலை மற்றும் வனவியல் மேம்பாட்டு கடன்கள்
தனிப்பட்ட விவசாயிகள் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள் சேர்ந்து அழகு தோட்டச்செடிகள், மரங்கள், நாற்றாங்கால் அமைத்தல் / நிர்வகித்தல், தோட்டங்கள் அமைத்தல், சீக்கிரம் வளரும் மரங்கள், சிறு மரங்கள் ஆகியவற்றை வளர்த்தல். அதற்குத் தேவையானவைகளான ஒட்டுக்கட்டுதல், இணைத்தல், மொட்டுக் கட்டுதல், வேலி அமைத்தல், நடவு செய்யும் நாற்றுகள் வாங்குதல், நிலம் தயார் செய்தல், விதை மற்றும் நாற்றுகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை.
தகுதி
தனிநபர் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள்
காலம்
இளைப்பாறும் காலத்தைப் பொறுத்து பல பயிர்களிலும் நிர்ணயிக்கப்பட்டது.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
12. மாட்டு வண்டிகள் மற்றும் எருது ஜோடிகளுக்கான கடன்கள்
ஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன்களை சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் / விவசாய மற்றும் நிலமற்ற வேலையாட்களுக்கு எருது ஜோடிகள் வண்டியுடன் வாங்குவதற்குக் கடன் வழங்குகிறது. எருது ஜோடிகள் வண்டியுடன் வாங்கினால் பல்வேறு பண்ணை வேலைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பண்ணை பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவுகிறது. நபார்டு வங்கியின் செயலக செலவைப் பொருத்து கடன் தொகை அனுமதியளிக்கப்படும். திருப்பிச் செலுத்தும் காலம் 4 முதல் 5 வருடங்கள் மற்றும் 3 மாதம் இடைப்பட்ட காலமும் அடங்கும். திருப்பிச் செலுத்தும் கால அளவு அரையாண்டு / வருடத்திற்கு ஒரு முறை செலுத்தும் தவணை முறைகள். 2 லட்சம் வரை வட்டி விகிதம் கடன்களுக்கு பி.பி.எல்.ஆர் கீழ் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
13. விவசாயிகளுக்கு இருசக்கர வாகனக் கடன்
ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி விவசாயிகள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு தவணை கடனாக ரூ. 50000/- வரையிலும் வழங்குகிறது. இதன் மூலம் விவசாய §வலைகளுக்கு எளிதாகச் ¦சன்று தகுந்த §நரத்தில் கண்காணிக்கவும் மற்றும் குறிப்பிட்ட §நரத்தில் சந்தைக்குச் ¦சல்லவும் உதவுகிறது.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
14. சாண எரிவாயு கலன்
ஆற்றல் பற்றாக்குறை வளர்ந்து வரும் நிலையில் புதிய அல்லது மரபு சாரா எரிசக்தித் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக தேசிய அளவில் சாண எரிவாயு கலன் அறையை இரும்புக் கைப்பிடி மற்றும் கழிவறை கட்டமைப்பு அதில் இணைக்கப்பட்டிருப்பின் நிதி வழங்குவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. பல அமைப்புகள், மண்டல அமைப்பு / மாநில அரசு / மத்திய அரசு ஆகியவை மானியம் வழங்குகிறது. இவை கடனுக்கு வட்டி அளவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
15. பால் பண்ணை கடன்கள்
தனிநபர்களுக்கு கடன்கள் மற்றும் குழுவாக விவசாயிகள் சேர்ந்து அதிக பால் கொடுக்கும் மாடுகள் வாங்குதல் (கால்நடை, நாட்டு இன மாடுகளான கிர், தார்பார்க்கர் மற்றும் கலப்பினங்களான ¦ஜர்சி, ஹோலிஸ்டின் பிரிசியன் மற்றும் எருமை மாடுகளான மேஃசானா, ஜவார்பாடி ஆகியவை) கால்நடை கொட்டகை அமைத்தல், பால் பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், தீவனம் வெட்டும் இயந்திரம் மற்றும் கால்நடைகளை வெளியூரில் வாங்கி இருந்தால், அதை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகளுக்கும் வழங்கப்படும்.
தகுதி
தனிநபர் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள் பால் பண்ணையில் முன் அனுபவம் பெற்றிருப்போர் மற்றும் அதில் ஆர்வமாக ஈடுபட்டிருப்போர் அனைவரும் தகுதியுடையவர்களாவர்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
16. கோழிப் பண்ணை
இந்தியாவில் கோழிப் பண்ணை என்பது புறக்கடை பண்ணை வளர்ந்து உயர்ரக நவீன பண்ணையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பண்ணையாகவும் வளர்ந்துள்ளது. வங்கிகள் கோழிப் பண்ணை, அதாவது முட்டை கோழிப் பண்ணை, கறிக்கோழிப் பண்ணை, குஞ்சு பொறிப்பகங்கள் ஆகியவற்றிற்கு கடன் வழங்கப் படுகின்றது.
தகுதி
சுயதொழில் முனைவோர் கோழிப் பண்ணை பற்றிய அனைத்து விசயங்களும் மற்றும் பயிற்சி சான்றிதழ் / முன் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றிருத்தல் வேண்டும். பின் இணைப்புகளான வானிலை சரியாக அமைதல், ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள், நீர் மற்றும் கால்நடை சேவைகள் ஆகியவை முதன்மையானவைகளாகும்.
நபார்டு வங்கியின் செயலகச் செலவுகள் பரிந்துரைப்பதை வைத்து கடன் அளவு முடிவு செய்யப்படும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
17. செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பிற்கான கடன்கள்
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்புகள் விவசாயத்திற்கான துணை செயல்கள். இருப்பினும் தனிப்பட்ட செயல்கள் என்பது வர்த்தக ரீதியில் லாபகரமானது. ஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன்கள் ரூ. 50,000 முதல் ரூ. 50 லட்சம் வரை தனிநபர் / குழு / வெள்ளாடு / கூட்டுறவு சங்கம் / சம்மேளனம் / லிமிடெட் நிறுவனம் ஆகியவை முன் அனுபவம் பெற்றும் அதில் ஆர்வமாக ஈடுபட்டிருத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
18. மீன் வளர்ப்பிற்கான கடன்
நீலப்புரட்சி மீன்வளத்துறை மேம்பாட்டிற்கு நல்ல ஆற்றலை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. வங்கிகள் மீன் சம்பந்தமான செயல்களான உள்நாட்டு மீன்வளர்ப்பு (மீன் குளம் அமைத்தல், விதை, தீவனங்கள் வாங்குதல்) கடலில் வளர்க்கும் மீன்கள் (கடலுக்கு உள்ளே, வெளியே ஆழ்கடல் மீன்பிடி) மற்றும் உப்பு நீர் திட்டம் தனிநபர் மீனவர்கள், கூட்டுறவு சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவை கடன் வசதிகள் பெறலாம்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
19. பன்றி வளர்ப்பிற்கு கடன்
விரைவான நகரமயமாதல், மீன் விற்பனைக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உணவுக்கூடக் கழிவுகள் மற்றும் காய்கறி சந்தைக் கழிவுகள், பன்றி வளர்ப்பு பண்ணைக்கு நல்ல உதவிகள் செய்துள்ளது. வங்கிகள் தனிநபர், விவசாயிகள் மற்றும் குழுவாக உள்ள விவசாயிகள் ஆகியோர்க்கு கடனுதவி வழங்குகிறது. விண்ணப்பதாரர் பன்றி வளர்ப்பதற்குத் தேவையான நிலம், நீர் மற்றும் பன்றி வளர்ப்பிற்கான போதுமான அறிவு மற்றும் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பன்றி வாங்குதல், கொட்டகை கட்டமைப்பு, பொருட்கள், வேலையாட்கள் ஆகியவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் கலப்பின இரகங்கள் வளர்க்க தேவையான திட்டக் கடன்களை வங்கி வழங்குகின்றது.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
20. பட்டுப்புழு உற்பத்திக்கான கடன் (பட்டுப்புழு வளர்ப்பு)
பட்டுப்புழு என்பது ஒருங்கிணைந்த செயல். இதில் மல்பெரி செடிகள் வளர்ப்பது மற்றும் பட்டுப்புழு வளர்த்தல் அடங்கும். வங்கிகள் தவணை கடன்களை பட்டு உற்பத்திச் செயல்களான மல்பெரி செடி சாகுபடி, பட்டுப்புழு வளர்த்தல், பட்டு எடுத்தல், சுருட்டுதல் மற்றும் பட்டுத் துணி நெய்தல், பட்டுச் சேலைகள் ஆகியவற்றிற்கு வழங்குகிறது. அனுபவம் பெற்ற சிறு விவசாயிகள் / குறு விவசாயிகள் / இதர விவசாயிகள் மற்றும் பயிற்சி பெற்ற தனிநபர்கள் இதற்குத் தகுதியானவர்கள். சந்தைபடுத்துதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றிற்கான கூட்டு முன்னேற்பாடுகள் / விண்ணப்பங்கள் மூலம் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
21. தேனீ வளர்ப்பு மது மக்சிகா பலன் (தேனீ வளர்ப்பு)
ஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன்களை தனி விவசாயிகள் / விவசாயிகள் அல்லாதோர், குழு விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கூட்டு நிறுவனம் / தனி நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு வழங்குகிறது. தேன் உற்பத்திச் செயலகம் அமைப்பதற்கு கடன்கள் வழங்கப்படுகிறது. மானியங்கள் DRDA/KVIC/KVIB ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகிறது. கடன்களை 5 முதல் 7 வருடங்களில் காலாண்டு / அரையாண்டு தவணைகளில் 11 மாத இடைவெளி காலத்தையும் சேர்த்து திருப்பிச் செலுத்தவேண்டும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
22. சேமிப்பு நிலையங்கள் கட்டமைப்பு மற்றும் நடத்துவதற்கும் கடனுதவி வசதிகள்
வங்கிகள் கடனுதவிகளை தனி விவசாயிகள், பொது மற்றும் தனியார் லிமிடெட் நிறுவனங்கள், APMC, முகவர்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு சேமிப்பு வசதிகளான (கோடோன், சந்தை வளாகம், சேமிப்புக் கிடங்கு, சைலோ) கட்டமைப்பு மற்றும் நடத்துவதற்கும் மற்றும் குளிர்ப்பதன சேமிப்பு கிடங்குகள் ஆகியவை வேளாண் பொருள் / பொருட்கள், இடத்தைப் பொருத்து இல்லாமல் அமைப்பதற்கும் உதவிகள் வழங்கப்படுகின்றது.
தகுதி
தனிப்பட்ட விவசாயிகள், குழு விவசாயிகள், அரசு சாரா நிறுவனங்கள். உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, கூட்டு நிறுவனம் / தனிநபர் நிறுவனம், பொதுத்துறை / தனியார் லிமிடெட் நிறுவனங்கள், கழகங்கள், கூட்டுறவுகள், APMC, வர்த்தக வாரியம் / குழுக்கள்.
கடன் தொகை
குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம்
அதிகபட்சம் ரூ. 20 கோடிகள்
காலம்
9 வருடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இரு வருடம் இடைப்பட்ட காலமும் சேர்ந்தது.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
23. விவசாய மருந்தகம் மற்றும் விவசாய வர்த்தக நிலையங்கள் (ACABC)
வங்கிகள் தவணை கடன்களை அங்கீகரிக்கப்பட்ட வேளாண் அல்லது அதன் சார்ந்த பட்டதாரிகளான தோட்டக்கலை, வனவியல், பால் பண்ணைத் தொழில்நுட்பம், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு ஆகியோருக்கு பெயர் பெற்ற மாநில அரசு / மத்திய அரசு மூலம் விவசாய மருந்தகம் மற்றும் விவசாய வர்த்தக நிலையம் (ABC) மூலம் வழங்கப்படும்.
தகுதி
விவசாய பட்டதாரிகள் மற்றும் அதன் துறை சார்ந்த செயல்கள் மேனேஜ் (MANAGE) நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம். விவசாய மருந்தகம் மற்றும் விவசாய வர்த்தக நிலையம் அமைப்பதற்கு உதவி செய்பவை.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
24. முகவர்களுக்கு நிதியளிக்கும் திட்டம்
இத்திட்டம் தவணை கடன் / அதிக வரைவு / பண கடன் ஆகியவற்றை தகுதி உள்ள நபர்களுக்கு வழங்கப்படுகிறது. கடன் வசதி ஊக்கவிப்பாளருக்குத் தொழிலில் 3 வருட முன் அனுபவம், இத்தொழிலில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் இருக்கவேண்டும் மற்றும் குறைந்தது 3 வருடங்கள் அதே இடத்தில் தொழில் நடத்தி வருதல்வேண்டும்.
தகுதி
- வேளாண் இடுபொருட்களில் முகவர்கள்
- வேளாண் மற்றும் அதனை சார்ந்த செயல்களுக்கு முகவர்கள்
- வேளாண் இயந்திரங்களுக்கு முகவர்கள்
- பாசன முறைகளுக்கு முகவர்கள்
- இடைத்தரகர்கள்
- முக்கியப் பொருட்களுக்கு முகவர்கள்
- கணிம எண்ணெய்களுக்கு முகவர்கள்
கடன் தொகை
கடன் தொகை ரூ. 10 லடசம் ரூ. 500 லட்சம் வரை வேறுபடும்.
காலம்
கடன் தொகைக்கான காலம் ஒரு ஆண்டு மற்றும் தவணை கடனுக்கு 3 ஆண்டுகள்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
25. வேளாண்மையில் உள்ள நவீன தொழில்நுட்பத் திட்டங்கள்
உலகமயமாக்கல் விவசாய முறைக்கு அதிக வணிக முக்கியத்துவம் பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. வேளாண்மையில் பாரம்பரிய முறைகளுக்கு எதிரான வகையில் வேளாண்மை உயர்நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வருவது நல்ல லாபகரமான துறையாக நிரூபணம் ஆகியுள்ளது. ஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன் மற்றும் கடன் நிதிகளை உயர் தொழில்நுட்ப திட்டங்களான திசு வளர்ப்பு, பசுமை குடில் தொழில்நுட்பம், மலர் சாகுபடி, குளிர்பதன சேமிப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வீரிய ஒட்டு விதைப் பெருக்கம் ஆகியவை. தனிநபர்கள் குழு விவசாயிகள், பயிற்சி பெற்றவர்கள், அனுபவம் பெற்றவர்கள் அதே துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆகியவை இதற்குத் தகுதியானவர்கள். இருப்பினும் மதிப்பீடுகள், திட்டத்தைப் பொருத்து மாறுபடும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
26. ஒப்பந்த பண்ணையம்
வங்கிகள் தனிநபர் விவசாயிகள் / குழு விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு நிறுவனங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அதில் கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள், வர்த்தச் செயலகங்கள் மற்றும் இதர கூட்டு நிறுவனங்கள் விவசாய வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர், இடுபொருள் வழங்குதல், தொழில்நுட்பங்கள் தெரிந்தவை ஆகியவற்றை ஒப்பந்தம் செய்து கொண்ட விவசாயிகளுக்கு இதன் மூலம் வழங்குதல்.
தகுதி
தனிநபர் விவசாயி, குழு விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் (விவசாயிகள் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டிருக்கும்) நிறுவனங்கள் மூலம் காணப்பட்டவை, அதில் கூட்டு நிறுவனம், வர்த்தகச் செயலகம், இதர விவசாய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டு நிறுவனங்கள்.
காலம்
திட்டத்தைப் பொருத்து மாறுபடும் (12 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள்)
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
27. சிறு நிதி நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல் (NFI)
இந்த திட்டம் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான (NFI) சிறு நிதிகளை உதவிகள் மூலம் குறிப்பிட்ட அனுபவம் பெற்று குறு கடன் திட்டத்தை நிர்வகித்தல், அதிக வளர்ச்சியுள்ள ஆற்றல் பெற்றவை, நல்ல பதிவுகள், தொழில் ரக ரீதியிலான அனுபவம் பெற்றவர்கள் ஆகியோர்.
தகுதி
தகுதியுள்ள முக்கிய அம்சங்களான சங்கங்கள் / அமைப்புகள் / நிறுவனங்கள் / என்.பி.எப்.சி ஆகியவை கூட்டாக சிறு நிதி நிறுவனங்கள் (NFI) என்று கூறப்படும்.
இது குறைந்தது 5 வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்றும் அல்லது குறைந்தது கடந்த 3 வருடங்களாக நல்ல முறையில் லாபகரமாக சிறு தவணை கடன் திட்டங்களை நடத்துவதற்கான பதிவுகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
வெளிப்படும் அளவு
குறைந்தபட்சம் - ரூ. 50 லட்சம்
அதிகபட்சம் - ரூ. 100 கோடிகள்
திருப்பிச் செலுத்தும் அட்டவணை
குறைந்தபட்ச கால அளவு - 1 வருடம்
குறைந்த கால அளவு - 5 வருடங்கள்
திருப்பிச் செலுத்துதல் என்பது மாதம் / காலாண்டு தவணை முறைகளில் செலுத்தவேண்டும்.
விண்ணப்பப் படிவங்களைப் பெற அழுத்தவும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.idbi.com |