லட்சுமி விலாஸ் வங்கி
- லட்சுமி கிசான் கடன் அட்டை
- லட்சுமி தனிப்பட்ட வாகனக் கடன்
- லட்சுமி தங்க சக்தி
1. லட்சுமி கிசான் கடன் அட்டை
லட்சுமி கிசான் கடன் அட்டை விவசாயிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட திட்டம்.
முக்கிய அம்சங்கள்
- இது சுழல் கடன் நிதி
- குறுகிய காலம் / வருட பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடிச் செலவுகளை பார்த்துக் கொள்ள கடன் அளவு வழங்கப்படும்.
- வங்கி கணக்கில் கடன் பாக்கி வைத்திருக்கும் அளவிற்கு வட்டித் தொகை கட்ட வேண்டும்.
- 3 வருடத்திற்கு உறுதியாக கடன் வசதிகள் வழங்கப்படும்.
- இணக்கமுள்ள வகையில் திருப்பிச் செலுத்தும் முறைகள்
- அதிகபட்ச அளவு ரூ. 10 லட்சம்
- ரூ. 50,000 மற்றும் அதற்கு மேல் உள்ளவற்றிற்கு காசோலைப் புத்தக வசதிகள்.
2. லட்சுமி தனிப்பட்ட வாகனக் கடன்
தேவை
சொந்த தேவைகளுக்கு வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது.
- புதிய மகிழ்வுந்து / வேன் / ஜீப்
- பயன்படுத்திய மகிழ்வுந்து / வேன் / ஜீப்
- புதிய இருசக்கர வாகனங்கள்
தகுதி
விவசாயிகள் (குறைந்தபட்சம் 8 ஏக்கர் பாசன நிலம்)
வருவாய்
மகிழ்வுந்து / வேன் / ஜீப் வாங்குவதற்கு கடன் வசதி
வருடாந்திர வருவாய் ரூ. 1.20 லட்சம் இருத்தல் வேண்டும் (போதுமான ஆதாரங்கள் தேவை)
இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வசதி
- குறைந்தபட்சம் நிகர மாத வருவாய் ரூ. 5000 /- உடன் தேவையான ஆதாரங்கள் வழங்கவேண்டும்.
அளவு
மிகழ்வுந்து / வேன் / ஜீப் வாங்குவதற்கு கடன் வசதி
- நிகர மாத வருவாயில் 20 மடங்கு அதிகமாக வழங்கப்படும்.
புதிய வாகனம்
- வாகனத்தின் மொத்த மதிப்பில் 80 சதவிகிதம் அளவு கடன் வழங்கப்படும். (அதிகபட்சம் ரூ. 10 லட்சம்)
பயன்படுத்திய வாகனம்
- வாகனத்தின் மொத்த மதிப்பில் 60 சதவிகிதம் அளவு கடன் வழங்கப்படும். வாகனத்தை அங்கீகரிக்கப்பட்ட வாகன பொறியாளர் மதிப்பிடல் செய்திருக்க வேண்டும். (அதிகபட்சம் ரூ. 5 லட்சம்)
புதிய இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு கடன் வசதி
- நிகர மாத வருவாயில் 6 மடங்கிற்கு அதிகமாக செல்லக்கூடாது அல்லது வாகனத்தின் மொத்த மதிப்பில் 75 சதவிகிதம் வைத்து குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் அதிகபட்சமாக ரூ. 50,000/- வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
3. லட்சுமி தங்க சக்தி
வசதியின் வகை
- தங்க நகையை அடகு வைத்து பொருட்களை அதிக வரைவு மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
தேவை
- தனிப்பட்ட நபர் / விவசாயம் / தொழில் தேவைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்து கொள்ள பயன்படுகிறது.
அளவு
குறைந்தபட்சம் : ரூ. 0.50 லட்சம்
அதிகபட்சம் : ரூ. 5 முதல் 50 லட்சம் வரை
ஒரு கிராம் தங்கத்திற்கான முன் பணம் நிர்ணயிக்கும் அளவை நேரத்திற்குத் தகுந்தது போல் மாறுபடும், மற்றும் வங்கியின் நிர்ணயிப்பவரின் அளவைப் பொருத்தும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.lvbank.com
|