ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
- பண்ணை கருவிகளுக்கு கடன் உதவிகள்
- விவசாயிகளுக்கான நிதி
- சில்லரை சேமிப்புக் கிடங்குகளில் இரசீதுகளை வைத்து நிதியளித்தல்.
- ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீன் வளர்ப்பிற்கு நிதியளித்தல்
- நீண்ட தவணை தோட்டக்கலை திட்டத்திற்கு மானியம் இணைந்த வசதிகள்
1. பண்ணை கருவிகளுக்கு கடன் உதவிகள்
- நாட்டில் உள்ள அனைத்து உழவு உந்து தயாரிப்பாளர்களும் விருப்பப்பட்ட நிதியாளர்களும் இதற்குத் தகுதியானவர்கள்.
- பண்ணை இயந்திரங்களுக்கு நாட்டில் 381 இடங்களில் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
- வேகமாக கோப்புகளை பிரித்து பதிவு செய்தல்
- விவசாயிகளுக்கு பருவக்காலத்தைப் பொருத்து, இணக்கமுள்ளவாறு எளிதாக திருப்பிச் செலுத்தும் வகையில் ஏற்படுத்திக் கொடுத்தல்.
- நமக்கு ஏற்றவாறு மாதம் ஒரு முறை, காலாண்டு, அரையாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுத்து திருப்பிச் செலுத்துதல்.
- சாதகமாக திருப்பிச் செலுத்தும் காலம் 1 முதல் 6 வருடங்கள் வரை.
கடன் தொகை
கடன் தொகை நுகர்வோரைப் பொருத்து தகுதி அடிப்படையில் வேறுபடும். உழவு உந்து வண்டிக்கு அதிகபட்சமாக செலவு தொகையின் 85 சதவிகிதம் மற்றும் இழுவை இயந்திரத்தின் தொகையில் 50 சதவிகிதம் வழங்கப்படும்.
பதிவுப்படுத்துதல்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
2. விவசாயிகளுக்கான நிதி
தகுதி
விவசாய பயனீட்டாளர்கள்
- தனிப்பட்ட நபர் 18 வயதிற்கு மேலாகவும் மற்றும் 65 வயதிற்குக் கீழாகவும் இருத்தல் வேண்டும் மற்றும் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டிருத்தல் வேண்டும்.
- சிரமங்களுடன் பங்கீடுகள் இருப்பின், குறைந்தபட்சம் 2 ஏக்கர் பாசன வசதியற்ற நிலம் அல்லது குறைந்தபட்சம் 0.5 ஏக்கர் பாசன வசதி உள்ள நிலம் வைத்திருத்தல் வேண்டும்.
- சிரமங்கள் இல்லாத வகையில் பங்கீடுகள் இருப்பின், குறைந்தபட்சம் 2 ஏக்கர் பாசன வசதி உள்ள நிலம் மற்றும் 5 ஏக்கர் பாசன வசதி இல்லாத நிலம் வைத்திருத்தல் வேண்டும்.
- ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 3 வருடங்களாக தங்கியிருத்தல் வேண்டும்.
- முன்பு கடன் பெற்றிருப்பின் அதில் திருப்பிச் செலுத்தாதவராக இருத்தல் கூடாது.
- நல்ல பெயர் இருத்தல் வேண்டும்.
- கடன் வழங்குவதற்குத் தேவையான ஆவணங்களை வழங்கும்படி இருத்தல் வேண்டும்.
கடன் தொகை
கடன் தொகை நுகர்வோரைப் பொருத்தும், கடன் வகை, அடகு வைத்துள்ள நிலத்தின் மதிப்பு, உற்பத்தி செலவு, நுகர்வோரின் வருவாய் மற்றும் கடன் தேவையின் கால அளவைப் பொருத்தும் வேறுபடும்.
கடன்கள் கீழ்க்கண்ட தேவைகளுக்கு நுகர்வோர்களுக்கு வழங்கப்படும்.
- பயிர் கடன்
- தனிப்பட்ட கடன்
- வாகன கடன்
- பால் பண்ணை கடன்
- நில மேம்பாட்டு கடன்
- கோழிப் பண்ணை கடன்
உத்திரவாதம் அளிப்பவர்
பதிவுப்படுத்துதல்
கடன் அங்கீகாரம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
3. சில்லரை சேமிப்புக் கிடங்குகளில் இரசீதுகளை வைத்து நிதியளித்தல்
கடன் பெறுபவரின் தகுதி
- விவசாயிகள்
- விவசாய தொழில் நிறுவனங்கள்
- வர்த்தகர்கள்
தகுதி அடிப்படைகள் (WMA)
- வர்த்தக இடைத்தரகர்கள் / கோடோன் உரிமையாளர் / சரக்குகளை இறுதியாகப் பயன் படுத்துவோர்.
- குறைந்தபட்சம் 2 வருடம் ஒரே இடத்தில் இருந்ததற்கான இருப்பிடச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் வர்த்தகத் தொடர்ச்சி
- நல்ல சந்தை மதிப்பு
- வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையில் நல்ல இணைப்பு பாலம் அமைத்தல்
கடன் தொகை
- விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 1 மில்லியன் வரை வழங்கப்படுகிறது.
- வர்த்தகர்கள் / செயல் களன் புரிவோர் / விவசாய தொழில் நிறுவனங்கள் வைத்திருப்போர் ஆகியோருக்கு அதிகபட்சமாக ரூ. 50 மில்லியன் வரை வழங்கப்படும்.
பதிவுபடுத்துதல்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
4. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீன் வளர்ப்பிற்கு நிதி அளித்தல்
விவசாயிகள் தேர்விற்கான அடிப்படைகள்
- தனிநபர் 18 வயதிற்கு மேலாகவும் 65 வயதிற்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் கடன் வழங்கும் நேரத்தில் 65 வயதிற்கு மேலாக இருப்பின், அவரின் இரத்த சம்பந்தப்பட்ட நபரை துணை விண்ணப்பதாரராக எடுத்துக் கொள்ளவேண்டும்.
- விவசாயிகள் நல்ல நீரில் வளரும் மீன்களை அவரின் சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் இருக்கின்ற உள்கட்டமைப்பு போன்ற வசதிகளை வைத்து வளர்ப்பவராக இருத்தல் வேண்டும். கூட்டு நிலமாக இருப்பின் (குத்தகை நிலமாக இல்லாமல்) அனைத்து துணை உரிமையாளர்களும் துணை விண்ணப்பதாரராக எடுத்துக் கொள்ளப்படும்.
- விவசாயிக்கு குறைந்தபட்சம் 10 ஏக்கர் நீர் சூழ்ந்த குளமாக மீன் பண்ணை வைத்திருத்தல் வேண்டும்.
- கடன் பெறுபவர் குறைந்தபட்சம் 5 சுழற்சி முறையில் மீன் வளர்ப்பை எடுத்திருத்தல் வேண்டும். இந்த முடிவடைந்த காலத்தை தண்ணீர் வரி செலுத்திய இரசீது / கிராம வருவாய் அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழ் / பழைய குத்தகைக்கு எடுத்த ஒப்பந்தம் ஆகியவற்றை வைத்து மதிப்பிடப்படும்.
- விவசாயி குத்தகை நில ஒப்பந்தத்தை அனைத்து நில உரிமையாளரிடமும் இருந்து குறைந்தபட்சம் 3 வருடங்கள் அனுமதித்த தேதியில் இருந்து பெற்றிருத்தல் வேண்டும். அவர் ஏற்கெனவே மீன் வளர்ப்பை தனது சொந்த நிலத்தில் செய்து கொண்டும் மற்றும் விரிவுப்படுத்தும் தேவைக்காக குத்தகை நிலத்தை எடுப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
- கடன் பெறுபவர் நிலம் கொடுப்பவரிடம் எந்த சட்டப் பூர்வமான பிரச்சனையும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 சந்தைக் குறிப்புகளை வழங்குபவர் வர்த்தகரிடம் இருந்து விண்ணப்பதாரர் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது ஏதாவது ஒரு இணை வர்த்தகரிடம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
- கடன் பெறுபவர் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் / இயக்குநர்கள் நிறுவனம் வைத்திருப்பவராகவோ அல்லது அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகவோ அல்லது அதன் மானியம் பெறும் நிறுவனங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குநராக இருத்தல் கூடாது.
- மீன் வளர்ப்பு தொழில் தொடங்க விவசாயி அந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பதிவு விண்ணப்பத்தைப் பெறுதல் வேண்டும். இந்த வசதிகள் புதிய குளங்கள், அங்கு புதியதாக முதன் முறை மீன் வளர்ப்பு நடைபெற இருப்பின் அங்கு வழங்கப்படும்.
கடன் தொகை
- வங்கி கடன்கள், இருக்கின்ற உள்கட்டமைப்பை வைத்து, தூய நீரில் மீன்வளர்ப்பு மேற்கொள்வதற்கு வழங்கப்படும்.
- இது ரூபாயில் முதலீட்டுப் பணம், தவணை கடனாகவும் / அதிக வரைவு வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
- கடன் தொகை அளவு மொத்த நீர் பரவியுள்ள பரப்பைப் பொருத்தும் மற்றும் மொத்த தொட்டியின் பரப்பளவைப் பொருத்து இல்லாமல் வழங்கப்படும்.
பதிவுபடுத்துதல்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
5. நீண்ட தவணை தோட்டக்கலை திட்டத்திற்கு மானியம் இணைந்த வசதிகள்
தகுதிகள்
- எந்த தனிநபரும் 18 வயதிற்கு மேலும் மற்றும் 65 வயதிற்குக் கீழும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 65 வயதைத் தாண்டியவராக இருப்பின், அவரின் இரத்த சம்பந்தப்பட்ட ஒரு நபர் உடன் கடன் வாங்குபவராகக் கையொப்பமிடல் வேண்டும்.
- கடனின் தேவைகள் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியத்தைப் பெற்று நீண்ட கால தோட்டக்கலை பயிர்களைப் பாசன உள்கட்டமைப்பு வசதிகளான சொட்டு நீர் பாசனத்துடன் இணைத்து வழங்கப்படும்.
- விவசாயி தேசிய தோட்டக்கலை வாரியத்திடம் (NHB) தேவைகளுக்கான கடிதத்தை (LOI) மேற்கண்ட திட்டத்திற்குப் பெற்றிருப்பின், அவர்கள் தகுதியுள்ளவர்கள்.
- கடன் பெறும் விவசாயி குறைந்தபட்சம் 5 ஏக்கர் பாசன நிலம் தோட்டக்கலைப் பயிரைக் கொண்டதாக இருத்தல்வேண்டும்.(மழை நீர் தவிர §வறு வகையிலும் பாசனம் வழங்கப்படும்.
- கடன் பெறும் விவசாயி அல்லது அவரின் நெருங்கிய உறவினர் சுயமாக நிலம் வைத்திருத்தல் வேண்டும். நெருங்கிய உறவினர் என்பது பெற்றோர், கணவன் / மனைவி அண்ணன் அல்லது மகன்.
- கடன் பெறும் விவசாயி கடனை வழங்குவதற்குத் தேவையான ஆவணங்களைக் கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.
கடன் தொகை
- கடன் தொகை நுகர்வோரைப் பொருத்தும் திட்ட செலவைப் பொருத்தும் மாறுபடும்.
- தனிப்பட்ட தவணை கடன் தொகை மொத்த திட்டத் தொகையில் அதிகபட்சமாக 60 சதவிகிதம் வழங்கப்படும்.
- தோட்டக்கலைப் பயிர்களான மா, நெல்லி, மொசாம்பி, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, கொய்யா, பைனாப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழை, பப்பாளி, எலந்தை, ஃபிக், லிட்சி ஆகியவற்றோடு பாசன உள்கட்டமைப்புகளான சொட்டு நீர் திட்டங்கள் ஆகியவை அனைத்திற்கும் பயிர் உற்பத்திக்கும் கடன் வழங்கப்படும்.
உத்திரவாதம் அளிப்பவர்
கடன் தொகை
பதிவுபடுத்துதல்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.icicibank.com |