வங்கி மற்றும் கடன் :: மண்டல கிராம வங்கிகள்
இந்தியாவில் உள்ள மண்டல கிராம வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கி மண்டல கிராம வங்கிகள் வைத்துள்ள பெரிய வணிக வங்கிகளில் ஒன்றாகும். இதன் கீழ் 30 மண்டல கிராம வங்கிகள் 13 மாநிலங்களில் இந்தியா முழுவதும் உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் உள்ள மண்டல கிராம வங்கிகளுக்கு 2000 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது.பாரத ஸ்டேட் வங்கி மட்டுமன்றி இதர வங்கிகளும் இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக செயல்படுகிறது.

இந்தியாவில் இதர மண்டல கிராம வங்கிகள்

ஹரியானா மாநில கூட்டுறவு தலைமை வங்கி லிமிடெட்
இவ்வங்கியின் முக்கியப் பணி ஹரியானாவின் கிராமப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகள், கலைஞர்கள், பயிற்சி பெறாத விவசாயக் கூலிகள் மற்றும் கிராமப்புற சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவி அளித்தல். இதை (HARCOBANK) ஹர்கோ வங்கி என்றும் அழைப்பர். இவ்வங்கி ஹரியானா மாநிலத்தில் சிறப்புப் பொருளாதார இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வங்கி நிறைய வங்கி நிதி உதவிகளை தனிநபர்களுக்கு வழங்குகிறது. இது விவசாயக் கடன், விவசாயம் இல்லாத கடன், வைப்பு நிதி போன்றவற்றில் வங்கி செயல்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு)
நபார்டு வங்கியின் முக்கிய நோக்கம் சிறு அளவிலான தொழிற்சாலைகள், வைவினைப் பொருட்கள், குடிசைத் தொழில்கள், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கடனுதவி அளித்தல். நபார்டு வங்கி கிராமப்புற பொருளாதார மேம்பாடு, தொடர்ச்சியான  வளர்ச்சி போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கின்றது. நிறுவன மேம்பாடு, கிராமப்புற துறைகளுக்கு கடன் வழங்குபவர்க்கு நிதியளித்தல், ஆய்வு செய்தல், கண்காணிப்பு மற்றும் நிதித்துறை கழகத்தை மதிப்பீடு செய்தல் போன்றவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றது. நபார்டு வங்கி மேம்பாட்டிற்கு உறுதுணையாக முதல் வங்கியாக நிறுவப்பட்டுள்ளது.

சிந்தானூர் நகர சல்கார்டா வங்கி
இந்த வங்கியின் முதல் குறிக்கோள் கிராமப்புற மக்களுக்கு நிதியுதவி அளிப்பதாகும். இதை சுகோ (SUCO) வங்கி என்றே பொதுவாக அழைப்பர்.

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
இவ்வங்கியின் பங்கு மிகவும் முக்கியமானது. இது கிராமப்புற வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் அதன் நிறைய கிளைகளை உருவாக்கி நேரடியாக உதவும்  வகையில் ஈடுபடச் செய்கிறது.

சிண்டிகேட் வங்கி
இதன் ஆரம்ப கட்ட வளர்ச்சி கிராமங்களில் மற்றும் இவ்வங்கி இந்தியாவின் வங்கித் துறை மேம்பாட்டிற்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும் சிண்டிகேட் வங்கி மிகப் பெரிய முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
இந்தியாவில் மண்டல கிராம வங்கிகள் கிராமப்புற வளர்ச்சிக்காக நிறைய அர்ப்பணித்துள்ளது. கிராமப்புற தொழில்துறைகள் மற்றும் கிராமப்புற தொழில்கள் மேம்பாட்டிற்கும் அதன் பொருளாதாரம் மற்றும் முதலீடு, நிதி உதவிகள் அனைத்தும் இந்தியாவின் மண்டல கிராம வங்கியின் மூலம் கிடைக்கபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள மண்டல கிராம வங்கிகள்
  • இந்தியன் வங்கி இரண்டு மண்டல கிராம வங்கிகளான சப்தகிரி கிராமின் வங்கி மற்றும்  பல்லவன் கிராம வங்கிகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.
  • தமிழ்நாட்டில் பல்லவன் கிராம வங்கி சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு  சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி, கோவை, கடலூர், கரூர், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர். ஆகிய 14 மாவட்டங்களில் இயங்கி வருகிறது.
  • புதுவையில் இந்தியன் வங்கியின் கீழ் நிதி பெற்ற 3 வது மண்டல கிராம வங்கியான புதுவை பாரதியார் கிராம வங்கியை செயல்படுத்தி இருக்கிறது.
முகவரி
பல்லவன் கிராமப்புற வங்கி,
6, ஏற்காடு ரோடு,
சேலம் - 636007, தமிழ்நாடு.

ஆதாரம்:
http://www.indian-bank.com/PuduvaiBharathiarGramaBank.html
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016