அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்
1. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
SIDBI - வங்கி ஏப்ரல் 2, 1990 ஆம் ஆண்டு பாராளுமன்ற விதியின் கீழ் தொடங்கப்பட்டது.
2. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) வர்த்தக நோக்கம் என்ன?
இதன் வர்த்தக நோக்கம் சிறு அளவிலான தொழல் துறைகள் (அலுவலகத்தின் முதலீடு மற்றும் இயந்திரங்கள் ரூ. 10 மில்லியன்களுக்கு அதிகமாக இருத்தல் கூடாது). SIDBI உதவிகள் போக்குவரத்து, உடல் நலம் பேணல், உணவகம் மற்றும் சுற்றுலா துறை, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர், சுய தொழில் முனைவோர் சிறு அளவிலான வேலையில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு நிதி உதவி அளித்தல்.
3. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) குறிக்கோள் என்ன ?
சிறு தொழில் மேம்பாட்டு வங்கி விதி, 1989 - ன் முன்னுரை, SIDBI- யின் நோக்கத்தை விவரிக்கிறது.
முதன்மை நிதி நிறுவனமான SIDBI வங்கி, ஊக்குவிப்பு, நிதியளிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சிறு தொழிற்சாலைகளுக்கு வழங்கி, ஊக்குவிப்பு மற்றும் நிதியளிப்புகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் செயற்கூறுகளை ஒருங்கிணைத்தல் அல்லது தொழிலை சிறு அளவில் மேம்படுத்துதல் மற்றும் அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்தல்.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) 4 முக்கிய நோக்கங்கள்
- நிதியகம்
- ஊக்குவிப்பு
- மேம்பாடு
- ஒருங்கிணைப்பு
ஆகியவை சிறு அளவிலான துறைகள் சரியான வளர்ச்சிக்காகத் தேவையான நோக்கங்கள்.
4. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) பல்வேறு திட்டங்கள் யாவை ?
SIDBI - யின் திட்டங்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- மறுநிதியளிப்புத் திட்டம்
- கட்டண நிதித் திட்டம்
- திட்டம் சம்பந்தமான நேரடி நிதித் திட்டம்
- ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்
இத்திட்டத்தைப் பற்றிய கீழ்க்கண்ட பிரிவுகளைப் பற்றி அறிய, எங்களது இணையதளத்தின் பொருட்கள் மற்றும் சேவை பிரிவுகளைப் பார்க்கவும்.
5. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் அல்லது ஊனமுற்றோருக்கான சிறப்புத் திட்டங்கள்
SIDBI வங்கி தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் அல்லது ஊனமுற்றோருக்கு மறுநிதியளிப்புக்களை வழங்குகிறது. இத்திட்டம் தொடக்கநிலை வழங்கும் நிறுவனங்களான மாநில நிதிக்கழகம் மற்றும் வணிக வங்கிகள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நீங்கள் திட்டத்தைப் பற்றி அறிய அருகில் உள்ள SFC அல்லது உங்கள் பகுதியில் உள்ள வங்கியை அணுகவும்.
6. ஐ.எஸ்.ஓ 9000 சான்றிதழ் நிதி உதவி திட்டம் பெற யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் ?
ஐ.எஸ்.ஓ 9000 சான்றிதழ் பெற SIDBI யின் உதவி பெற தொடக்க நிலை நிறுவனங்களான மாநில நிதி கழகங்கள், வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் உதவிகள் பெறத் திட்டத்தின் விரிவானவற்றை வைத்துக் கொண்டு அணுகவும். நேரடியாக உதவிகள் பெற அருகில் உள்ள SIDBI - யின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பெறலாம்.
மேலும்
|