வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயற்கூறுகள்

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் மொத்தம் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 15 பால் பண்ணைகள் உள்ளது. இதில் 19.42 லட்சம் லிட்டர் நாள் ஒன்றுக்கு பதப்படுத்தும் திறன் உள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் 36 குளிரூட்டும் நிலையங்கள் (இயங்கும் நிலையில்) 13.55 லட்சம் லிட்டர் நாள் ஒன்றுக்கு குளிர்விக்கும் திறன் கொண்ட அளவில் உள்ளது.

  1. குளிர்விக்கும் நிலையங்கள் அமைத்தல்

  2. சங்கங்களின் உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பாலை எடுத்து வருவதற்கு புதிய பால் வழித்தடங்களை ஏற்படுத்துதல்.

  3. சங்கங்களில் இருந்து பாலை எடுத்து வருதல், செயல்படுத்துதல் மற்றும் அதை நவீன பால் பண்ணை செயலகங்களில் அடைத்து உயர்தரத்தை பராமரித்தல் ஆகியவை.

  4. தரமான பாலை சென்னை மாநகரத்திற்கு சுகாதாரமான முறையில் அனுப்புதல்.

  5. பால் கொள்முதல் மற்றும் விற்பனை செலவை நிர்ணியித்தல்.

  6. பால் விற்பனையை புதிய விற்பனை ஊக்குவிப்புச் செயல்கள் மற்றும் திட்டங்கள் மூலம் அதிகப்படுத்துதல்.

  7. சங்கங்களின் உறுப்பினர்களுக்கு இடுபொருட்கள் வழங்குதல்.

  8. கால்நடை உடல்நல சேவைகள் அளித்தல் மற்றும் கால்நடைகளுக்கு அவசர சேவைகள் அதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வழங்குதல், முதல் உதவி செய்வதற்கு பயிற்சி அளித்தல், சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள அலுவலர்களுக்கு செயற்கை கருவூட்டல் பற்றி பயிற்சி அளித்தல் ஆகியவை.

  9. பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் வைத்திருக்கும் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவைகளை வழங்குதல்.

  10. பால் கேன்கள், பால் (O) சோதிப்பான், L.N 2 கொள்கலன்கள் அளித்தல்.

  11. சேலம், ஈரோடு, மதுரை, தர்மபுரி ஒன்றியங்கள் ஆகிய இடங்களில் சேமிப்பு பால் பண்ணைகள் உள்ளது. மாவட்ட ஒன்றியத்தில் அதிகமாக உள்ள பாலை, உள்ளூர் விற்பனை போக, மீதம் உள்ளவற்றை அருகில் உள்ள சேமிப்பு பால் பண்ணைகளுக்கு அனுப்பி அவற்றை பால் பொருட்களான பால் பொடிகள், வெண்ணெய், நெய் போன்று மாற்றப் படுகின்றன.

  12. மூன்று கால்நடை தீவன கலன் இருக்கும் இடங்களான மாதவரம், ஈரோடு மற்றும் கப்பலூர் ஆகியவை காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஒன்றியம், ஈரோடு ஒன்றியம், மதுரை ஒன்றியம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படுகிறது. கால்நடை தீவன உற்பத்தி செய்யும் இதன் கொள்ளளவு நாள் ஒன்றுக்கு 100 மெட்ரிக் டன் ஆகும். கால்நடை தீவனம் உற்பத்தி குருணைகளாகவும் மற்றும் உருளைக் கிழங்கு தூள் ஆகியவை பால் கூட்டுறவுகள், கால்நடை பண்ணைகள் கால்நடைத் துறையின் கீழ் வருபவை மற்றும் பல்வேறு உள்ளூர் அமைப்புகள், சென்னை மாநகராட்சி உள்பட அனைத்திற்கும் இவை வழங்கப்படுகிறது.
ஆதாரம்: http://www.aavinmilk.com
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016