வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்

கூட்டமைப்பின் செயற்கூறுகள் (TCMPF)
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைமை அமைப்பு ஆகும். இந்த கட்டமைப்பிற்கு சென்னையில் 4 பால் பண்ணைகள் உள்ளது. ஒன்று அம்பத்தூரில் 4 லட்சம் லிட்டர் நாள் ஒன்றுக்கு கையாளும் திறன், மாதவரத்தில் 2 லட்சம் லிட்டர் நாள் ஒன்றுக்கு, சோழிங்கநல்லூரில் 4 லட்சம் லிட்டர் நாள் ஒன்றுக்கு கையாளும் திறன் கொண்டவை. இந்த பால் பண்ணைகள் மாவட்ட ஒன்றியத்தில் இருந்து எடுத்து வந்து, அதை பதப்படுத்தி பாக்கெட்டில் அடைத்து, நுகர்வோருக்கு விற்பனைக்கு சென்னை நகரைச் சுற்றி அனுப்பப்படுகிறது. நான்காவது பால் பண்ணையான அம்பத்தூரில் உள்ளவை, பால் பொருட்கள் தயாரிப்பான தயிர், பால் கோவா, ஐஸ்கிரீம், குலாப் ஜாமூன், வெண்ணெய் பால், மைசூர்பா ஆகியவற்றைச் செய்து வருகிறது.

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் பால் கொள்முதல் செய்தல்
கிராமப்புற மக்கள் குறிப்பாக பெண்கள் அவர்களின் பிழைப்பிற்காக மாடுகள் வளர்த்து அதன் பாலை கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்புகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்த மற்றும் கிராமப்புறங்களில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு  மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு பால் கொள்முதல் விலையை மாட்டுப் பாலுக்கு ரூ. 10.50 - ல் இருந்து ரூ. 12 ஒரு லிட்டருக்கு மற்றும் எருமை பாலுக்கு ரூ. 12.50 - ல் இருந்து ரூ.14.00 ரூபாயாக 07.03.2007 - ல் இருந்து அமலுக்கு வரும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி விலை மேற்கண்ட திருத்திய கொள்முதல் விலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவுள்ளது.

பால் கொள்முதல் விலை பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகப்படுத்தி 07.03.2007 முதல் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

எருமைப் பால் மாட்டுப்பால்
விலை லிட்டர் ஒன்றுக்கு (ரூ) 7.0 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 8.8 சதவிகிதம் எஸ்.என்.எப் (SNF) விலை லிட்டர் ஒன்றுக்கு 4.5 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 8.5 சதவிகிதம் எஸ்.என்.எப் (SNF)
7.3.2007 முன்
7.3.2007 முதல்
7.3.2007 முன்
7.3.2007 முதல்
12.50
14.00
10.50
12.00

ஆதாரம்: http://www.aavinmilk.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016