மத்திய அரசின் மானியம் பெறும் திட்டங்கள்
மகளிர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு உதவுதல் (STEP)
இத்திட்டம் 7 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அதாவது சேலம், ஈரோடு, தர்மபுரி, வேலூர், விழுப்புரம், கோவை மற்றும் திருச்சி உள்ளடக்கிய 13 வருவாய் மாவட்டங்களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 145 மகளிர் பால் பண்ணை கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த சங்கங்களுக்கு கால்நடை உடல் நலப் பாதுகாப்பு காப்பீடு, செயற்கை கருவூட்டல், சரிவிகித கால்நடை தீவனம் அனுப்புதல், தீவன உற்பத்தி, தடுப்பூசி திட்டங்கள், நிர்வாக மானியங்கள், பால் குளிர்விக்கும் செலவுகள், பால் சேவைக் கட்டணம், பால் மாடுகள் வாங்குவதற்கு உறுப்பினர்களுக்கு அதிகபட்ச பண அளவு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இறுதியில் 10,000 பெண்கள் கூட்டுறவு சட்ட விதிகளின்படி பயிற்சி பெறுதல், செயற்கை கருவூட்டல், கால்நடைகளுக்கு முதலுதவி, விவசாயிகள் ஈடுபடுத்தும் திட்டம், பால் மாடுகள் நிர்வகித்தல், பால் சோதனை செய்யும் உபகரணங்கள் உபயோகித்தல், பாலில் கலப்படங்களைக் கண்டறிதல் ஆகியவை பெற்றுள்ளனர். இதில், மகளிர் பால் பண்ணை கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இதன் பயனீட்டாளர்கள் உற்பத்தி செய்யும பால் அனைத்திற்கும் வருடம் முழுவதும் நல்ல விலை கிடைக்க உறுதி கொடுக்கப்பட்டு இத்திட்டத்தை லாபரமாகக் கொண்டு செல்ல உதவுகிறது.
இங்கு நிர்ணயிக்கப்பட்ட 145 மகளிர் பால் பண்ணை கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இதில் 10150 பெண் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சராசரி பால் கொள்முதல் எஸ்.ஈ.டி.பி (STEP) சங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 26283 லிட்டர் ஆகும்.
சராசரி வருவாய் ரூ. 60 நாள் ஒன்றுக்கு பயனீட்டாளர்களுக்குக் கிடைக்கின்றது.
தீவிர பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் நிதிகள் அனைத்தும் சங்கங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு பால் கொள்முதல், பால் விற்பனை, பால் பதனிடுதல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், இடுபொருள் செயல்களுக்கு விரிவுபடுத்துதல், மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு மனிதவள மேம்பாட்டை ஏற்படுத்துதல் ஆகியவை நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
ஆதாரம்:
http://www.aavinmilk.com |