ரீபாட்ரியேட்ஸ் கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்ட வங்கி லிமிடெட் (REPCO)
ரெப்கோ வங்கி லிமிடெட் 1969 ஆம் ஆண்டு பர்மா மற்றும் இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்டது. வங்கியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் திட்டங்கள் வெளிப்படையானது. அதன் முக்கிய குறிக்கோள்களை சரிவர செய்வதற்காக இவ்வாறு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இவ்வங்கி இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
வங்கியின் பணி எல்லை
வங்கியின் இயங்கும் பகுதகளின் முக்கியமாக இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம்.
கடன் மேம்பாடு
- சிறு வர்த்தகம், வணிகம், தொழிற்சாலைகள் வங்கி, கிளையின் இயங்கும் பகுதிக்குள் வந்தால், அதன் மேம்பாட்டிற்கு கடன் வழங்கப்படுகிறது.
- விண்ணப்பதாரர் தினமும் வைப்பு நிதிக்கு பணம் செலுத்துபவராக இருத்தல் வேண்டும்.
- கடன் அளவு தினமும் வைப்பு தொகை செலுத்துவதைப் பொறுத்தும் மற்றும் அதன் தேவையைப் பொருத்து முடிவு செய்யப்படும்.
- அதிகக் கடன் அளவுகளுக்கு கூட்டு பாதுகாப்புகள் வழங்கப்படுகிறது.
- கடனை தினசரி திருப்பிச் செலுத்துவது போல் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
வாடகை பயன்பாட்டிற்கான நிதியுதவி
- வாகனம், இயந்திரம், கருவிகள் வாங்குதல்
- அளவு 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை
- காலம் : அதிகபட்சமாக 3 வருடங்கள்
- தரை அல்லது குறையும் வட்டி விகிதம்
- அதிகபட்ச அளவிற்கு கூட்டு பாதுகாப்பு ஆவணங்கள் வழங்குதல்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் http://www.repcobank.com
|