உயிரி எரிபொருள் ::  கூகும்

தாவரவியல் பெயர்  : கார்சினினயா இண்டிகா
குடும்பம்               : க்ளுசியேசியே

மேற்குத் தொடாச்சி மலையின் பசுமை மாறாக் காடுகளில் காணப்படுகிறது. மஹராஷ்டிரா மாநிலத்தின் தென்மாவட்டங்கள் மற்றம் நீலகிரியின் தாழ்வான சரிவுப் பகுதிகளிலும் காணப்படுகிறது. பழங்கள் நன்கு சுவையான, மணமுடைய மற்றும் உண்ணத்தகுந்த இனிப்பு புளிப்பு சுவை கொண்டவை. அவற்றில் 10 சதவிகிதம் மாலிக் அமிலமும், சிறிதளவு பார்டாரிக் மற்றும் சிட்ரிக் அமிலச் சத்தும் இருக்கும். விதைகளில் இருந்து கிடைகும். “கோக்கம் பட்டர்” என்ற கொழுப்புச்சத்து சோப்பு மற்றும் மெழுகுவர்த்தி உற்பத்தியில் பயன்படுகிறது. இது களிம்பு தயாரிப்பு மற்றும் மருந்துகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது.

ஸ்டியரிக் மற்றும் ஒலிக் அமிலங்களின் கலவை கோக்கம் பட்டரில் நிறைந்துள்ளது. இதனில் 75 சதவிகிதம் மோனோ ஒலியோடை சாச்சுரேட் (monooleodisaturated) கிளிசலைட்டஸ் உள்ளது. மேலும் அதன் உருகும் தன்மை மிகக் குறைவாகும் மற்றும் எளிதில் உடையக்கூடியதாகும். இது சத்து மிக்கது மற்றும், நோய் தணிக்கும் மருந்து மற்றும் துவர்ப்பு சுவை கொண்டதாகும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013