காட்டாமணக்கு பயோடீசல் உற்பத்தியில் மதிப்பூட்டுதல்
காட்டாமணக்கு தொல்லியிலிருந்து எரிவாயு தயாரித்தல்
தொல்லியின் பயன்பாடு - வெப்ப எரிவாயு உற்பத்தி
காட்டாமணக்குத் தொல்லியிலிருந்து வெப்ப எரிவாயு கலன் மூலம் வெப்ப எரிவாயு உற்பத்தி செய்யலாம். த நா வே ப வடிவமைக்கப்பட்ட இக்கலனில் மணிக்கு 6-8 கிலோ தொல்லியிலிருந்து 12-14 கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யலாம். இக்கலனின் வெப்ப இணைதிறன் 55-60 சதம் ஆகும். காட்டாமணக்குத் தொல்லியின் வெப்ப ஆற்றல் 17.2 மெகா ஜீல்ஸ் / கிலோ ஆகும்.
காட்டாமணக்கு புண்ணாக்கிலிருந்து உரம் மற்றும் உயிர் எரிவாயு தயாரித்தல்:
காட்டாமணக்கு புண்ணாக்கு ஒரு மதிப்புமிக்க உரமாக கண்டறியப்பட்டுள்ளது. வேப்பம் புண்ணாக்கிற்கு அடுத்த படியாக அதிகளவு தழைச்சத்து வாய்ந்நததாகும்.
காட்டாமணக்கு புண்ணாக்கு மற்றும் இயற்கை உரங்களின் தழை, மணி, சாம்பல் சத்திற்கான ஒப்பீடு:
1 கிலோ சாணத்திலிருந்து கிடைக்கப் பெறும் சாண எரிவாயு சுமார் 40 லிட்டர் ஆகும். ஆனால் காட்டாமணக்கு புண்ணாக்கிலிருந்து சுமார் 200 லிட்டர் வரை உயிர் எரிவாயு உற்பத்தி செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
கிளிசரால்:
பயோடீசல் உற்பத்தியின் முக்கிய உபபொருள் கிளிசரால் ஆகும். தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்கு தூய்மையான கிளிசரால் தேவைப்படுகிறது. பயோடீசல் உற்பத்தியின் உபபொருளான கிளிசராலில் அசுத்தங்கள் நிறைந்திருக்கும். பயோடீசல் உற்பத்தி செலவு மற்றும் கிளிசரால் தூய்மைப்படுத்தும் வசதிகளை கொண்டே கிளிசரால் உற்பத்தி அமையும். பொதுவாக வடிகட்டுதல் வேதியியல் சேர்க்கைகள் மற்றும் பகுப்பு வெற்றிட வடித்தல் முறைகள் மூலம் பல்வேறு தரங்களில் கிளிசரால் கிடைக்கும். கிளிசராலின் பயன்பாடுகளை அதிகப்படுத்துவதன் மூலம் பயோடீசல் உற்பத்தி செலவுகளை குறைக்கலாம்.
கிளிசராலின் பயன்கள்:
உணவு, மருந்து, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பொகையிலை தொழிற்சாலைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது. உயவு பயன்பாடு, உறையாத நிலை பொருள்கள், கரைப்பான் மற்றும் நெகிழியாக பயன்படுகின்றது. மருந்தாக பயன்படுத்தும் பொழுது தூய்மைபடுத்தப்பட்ட கிளிசரின் தான் உபயோகிக்க வேண்டும். ஏனெனில் தூய்மைப்படுத்தாத கிளிசரின் உடலில் புண்கள் உண்டாக்கி எரிச்சல் தன்மையை கொடுக்கும். இதனால் தோல் உரியும் தன்மை பெறும். ஆதலால் தூய கிளிசரின் பயன்படுத்துவதே சிறந்தது.
|