பி.டி கத்தரி
கத்தரி உலகத்தில் ஒரு முக்கியமான காய்வகையாக வளர்க்கப்படுகிறது. இந்த காயை குருத்து மற்றும் காய் துளைப்பான் தோராயமாக 50% முதல் 70% வரை தாக்குவதால் $221 மில்லியன் வரை நஷ்டம் அடைகிறது. புழுவானது செடியின் ஆரம்ப நிலை வளர்ச்சியை பாதிக்கசெய்வதுடன் அதன் பின்னிலையில் முதிர்ந்த மற்றும் முதிர்ச்சியடையாத காயை பாதிக்கசெய்கிறது. இதை தடுப்பதற்காக விவசாயிகள் பூச்சிக்கொல்லியை 5 முதல் 20 முறை தெளித்த போதும் மிக சிறியளவிலேயே இப்பூச்சியை கட்டுபடுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாது அதிக செறிவு கொண்ட பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்துவதால் பூச்சிகள் புத்துயிர்ப்பு அடைவதோடு காய்கள் அதிகமான பூச்சிகொல்லியின் தன்மையை அடைகிறது. ஆகையால் இப் பிரச்சனையிலிருந்து வெளிவர குருத்து மற்றும் காய் துளைப்பான் தடுப்பாற்றல் உடைய கத்தரி வகைகளை உருவாக்குவது அவசியம். இதற்காக மரபியல் அல்லது உயிர் தொழில் நுட்ப முறைகள் பயன்படுத்தபடுகிறது. பி.டி கத்தரி தொழில் நுட்பமானது உயிர் தொழில் நுட்ப முறையால் உருவாக்கபட்ட குருத்து மற்றும் காய்த்துளைப்பான் தடுப்பாற்றல் கொண்டது.
மண்ணிலுள்ள பாக்டீரியாவான பேசில்லஸ் துருஞ்செனிசிஸில் இருந்து எடுக்கப்பட்ட பி.டி மரபனுவை [cry1Ac] அக்ரோபாக்டீரியம் மூலம் கத்தரி மரபனுவில் அறிமுகபடுத்தி பி.டி கத்தரி உருவாக்கப்பட்டுள்ளது.மரபனு மாற்றப்பட்ட கத்தரி cry1Ac மூலமாக குருத்து மற்றும் காய்த்துளைப்பானை கட்டுபடுத்தலாம்.இப்பூச்சி கத்தரியை உண்ணும் போது செடியால் பி.டி புரதம் வெளிகொணரபடுவதால் இப்பூச்சியின் செரிமான நிகழ்வானது தகர்க்கப்பட்டு 48 - 72 மணிக்குள் இறந்துவிடுகிறது. பி.டி கத்தரி வகையால் அதிகளவில் குருத்து மற்றும் காய்த்துளைப்பான் பூச்சிகளை கட்டுபடுத்தலாம். அதுமட்டுமல்லாது பூச்சி கொல்லியின் பயன்பாடும் மிகக் குறைந்தளவே காணப்படுகிறது.
|
|
Non-Bt Brinjal |
Bt Brinjal |
|