உண்மையில் நெல் உற்பத்தியில் நாம் தன்னிறைவை அடைந்திருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக உணவு உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இன்றைய ஆராய்ச்சி தான் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் ஏற்படும் நெல்லின் தேவைக்கு உதவு கோலாகும்.
நாம் உணவு உற்பத்தியில் இன்னும் 215 மில்லியன் டன்களைத் தாண்டவில்லை. 2015 ல் உணவு தானியங்களின் தேவை 2040 மில்லியன் டன்களாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தியை பெருக்க அதிக விளைச்சல் தரக்கூடிய மற்றும் பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட புதிய நெல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுக்கள் தேவைப்படுகின்றன. இதற்கு உயிரியல் தொழில் நுட்பத்தின் வாயிலாக மரபணு மாற்றம் ஒரு முக்கியமான கருவியாக அடைந்துள்ளது.
பி.டி.புரதமானது சாகுபடி நிலத்திலிருந்து எடுக்கப்பட்டது தான். எனவே, மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது ஆராய்ச்சியின் வாயிலாகக் கிடைத்துள்ள உண்மை. இப்புரதம் குறிப்பிட்ட பூச்சிகளின் ஜீரண மண்டலத்தை மட்டும் பாதிக்கும். அது மற்ற உயிரினங்களுக்கோ, கால் நடைகளுக்கோ மனிதர்களுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் பி.டி.நெல்லில் உள்ள அனைத்து சத்துகளும் சாதாரண நெல்லில் என்ன அளவு இருக்கிறதோ அதே அளவுதான் உள்ளது. பி.டி.நெல்லில் நச்சுத் தன்மை உள்ளதா, ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளதா என்பதையும் மாதிரி விலங்குகளில (டெஸ்ட் அனிமல்ஸ்) பரிசோதித்து பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மத்திய அரசு இந்த நெல்லை சாகுபடிக்கு பரிந்துரை செய்கிறது.
உணவுப் பயிர்களான மக்காச்சோளமும், சோயாவும் அதிக அளவில் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மரபணு மாற்றிய மக்காச்சோளமும், சோயாவும் அதில் அடங்கும். இவ்வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் நாடுகளில் ஏற்றுமதி பாதித்ததாக தெரியவில்லை. ஐரோப்பாவில் மட்டுமே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதில்லை. ஏனெனில், ஐரோப்பாவைப் பொறுத்தவரை உணவுப் பாதுகாப்பு (Food security) ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக இல்லை. மற்ற நாடுகளுக்கு இது பொருந்தாது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மரபணு மாற்றம் பெற்ற பயிர்களின் ஆராய்ச்சி
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் அனுமதியுடனும் அத்துறையின் கீழ் இயங்கும் குழுக்களின் ஒப்புதல் மற்றும் பரிந்துரைகளின் படியுமே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மரபணு மாற்றம் பெற்ற பயிர்களின் மீதான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
மத்திய அரசு இதற்கென்றே தனி குழுக்கள் அடைந்துள்ளது. அஃதாவன
- மரபனு மாற்ற ஒப்புதல் அளிக்கும் குழு (GEAC - Genetic Engineering Approval Committee)
- மரபணு மாற்ற மறு ஆய்வுக்குழு (RCGM - Review Committee on Genetic Manipulation)
- கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு தேர்வுக் குழு (MEC - Monitoring and Evaluation Committee)
இந்த குழுக்களின் மூலமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி இயக்கத்தின் ஆராய்ச்சி இயக்குநர் அவர்கள் செயல்பாடு அதிகாரியாக (Nodal officer) கொண்டு ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி குழுக்கள் அமைத்து, அக்குழுவில் பயிர் அறிஞர்கள் மற்றும் அப்பயிர் பயிரப்படும் பகுதியைச் சார்ந்த வேளாண் துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக செயல்படுகின்றார்கள். அக்குழுவில்,
- மரபியல் நிபுணர் (Breeder)
- உழவியல் நிபுணர் (Agronomist)
- பூச்சியியல் நிபுணர் (Entomologist)
- பயிரி நோயியல் நிபுணர் (Pathologist)
- மரபியல் மற்றும் மூலக்கூறு நிபுணர் (Director, CPMB)
- வேளாண் துறை இணை, துணை இயக்குர் (JDA) மற்றும்
- வேளாண் அதிகாரி (Agricultural Officer) ஆகியோர் அடங்கும்
இந்த குழு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு குழுவாக (MEC) செயல்பட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் விளைச்சல், தரம் சுற்றுசூழலின் நன்மை, தீமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மரபணு மாற்ற , ஆய்வுக்குழு , மரபணு மாற்ற ஒப்புதல் அளிக்கும் குழுவிற்கு வருடம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்கிறது. அவ்வறிக்கையை ஏற்றுக் கொண்டு RCGM ஒப்புதலுடன் GEAC அப்பயிர்களை வெளியீடு செய்கிறது.
கடந்த ஆண்டில் (2007-08) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்சோதனை செய்யப்பட்டப் பயிர்களின் விவரம்
வ.எண் |
பயிர் |
ஒட்டு இரகங்களின் எண்ணிக்கை |
மொத்த சோதனை திடல்கள் |
மாவட்டம் |
பல இட ஆராய்ச்சி திடல் |
பரந்த அளவிலான திடல் |
1. |
பி.டி.பருத்தி |
1040 |
208 |
சேலம் - (34)
கோயம்புத்தூர் - (13)
திண்டுக்கல் - (3)
தர்மபுரி - (3)
பெரம்பலூர் - (2)
வேலூர் - (2)
விழுப்புரம் - (2)
நாமக்கல் - (1)
திருச்சி - (1) |
சேலம் - (88)
பெரம்பலூர் - (28)
கோயம்புத்தூர் - (27)
தர்மபுரி - (17)
திருச்சி - (14)
வேலூர் - (10)
விழுப்புரம் - (7)
ஈரோடு - (2)
கிருஷ்ணகிரி - (1) |
2. |
பி.டி.நெல் |
4 |
2 |
கோயம்புத்தூர் - (1)
தஞ்சாவூர் - (1) |
- |
3. |
பி.டி.கத்தரி |
4 |
2 |
மதுரை - (1)
கோயம்புத்தூர் - (1) |
- |
4. |
பி.டி.வெண்டை |
4 |
2 |
கோயம்புத்தூர் - (2) |
- |
தமிழ்நாட்டில் பி.டி.பருத்தி பயிரிடப்படும் மாவட்டங்கள் (2006-07)
மாவட்டம் |
பயிரிடப்படும் பரப்பளவு (ஏக்கரில்) |
பெரம்பலூர் |
32257 |
சேலம் |
27046 |
விழுப்புரம் |
11308 |
தர்மபுரி |
9695 |
திருச்சி |
9454 |
வேலூர் |
6991 |
கிருஷ்ணகிரி |
5796 |
கடலூர் |
2296 |
ஈரோடு |
1542 |
கோயம்புத்தூர் |
1193 |
திருநெல்வேலி |
923 |
திண்டுக்கல் |
872 |
விருதுநகர் |
406 |
தஞ்சாவூர் |
375 |
தேனி |
162 |
மதுரை |
116 |
நாமக்கல் |
90 |
தூத்துக்குடி |
24 |
மொத்தம் |
110546 |
பி.டி.பருத்தி சாகுபடியில் நிகர இலாபம் (2006-2007)
(AICRIP - Report)
பருத்தி ஒட்டு இரகம் |
எக்டருக்கு நிகர இலாபம் (ரூபாய்) |
1. பி.டி.பன்னி (Bt Bunny) |
27900 |
2.நான் பி.டி.பன்னி (Non Bt Bunny) |
23400 |
மதிப்பீடு செய்தவர்கள் தகவல்கள்
வ.எண் |
பெயர் |
பதவி |
முகவரி |
தொலைபேசி எண்
அலுவலகம்
மின் அஞ்சல் |
நிபுணத்துவம் |
அனுபவம் |
1. |
டி.சுதாகர் |
பேராசிரியர் |
தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர் |
6611353 |
தாவர மூலக்கூறு உயிரியல் |
20 ஆண்டுகள் |
2. |
கிருஷ்ணவேணி |
பேராசிரியர் |
தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர் |
6611353 |
தாவர மூலக்கூறு உயிரியல் |
30 ஆண்டுகள் |
3. |
கோகிலாதேவி |
துணைப் பேராசிரியர் |
தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பத்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர் |
6611353 |
தாவர மூலக்கூறு உயிரியல் |
8ஆண்டுகள் |
அட்டவணை 1
பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன்- பருத்தி இந்தியாவில்
வருடம் |
பரப்பளவு (இலட்சம் எக்டர்) |
உற்பத்தி (இலட்சம் பேல்கள்) |
உற்பத்தித் திறன் (கி.கி.லிண்ட், எக்டர்) |
2000-01 |
81.5 |
167 |
319 |
2001-02 |
85.9 |
153 |
309 |
2002-03 |
73.9 |
158 |
322 |
2003-04 |
76.3 |
179 |
399 |
2004-05 |
89.2 |
243 |
463 |
2005-06 |
88.2 |
243 |
465 |
அட்டவணை 2
இந்தியாவில் பி.டி.பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு (விற்பனை செய்யப்படட விதை அளவினைப் பொறுத்து) (450 கிராம், ஒரு பாக்கெட்)
எண். |
மாநிலம் |
2002 |
2003 |
2004 |
2005 |
1. |
ஆந்திரப்பிரதேசம் |
3792 |
5199 |
73890 |
226684 |
2. |
மத்தியப் பிரதேசம் |
1482 |
12968 |
87894 |
142062 |
3. |
குஜராத் |
9104 |
42097 |
134034 |
147335 |
4. |
மகாராஷ்டிரா |
12379 |
18711 |
208715 |
621111 |
5. |
கர்நாடகா |
2178 |
3547 |
20443 |
28888 |
6. |
தமிழ்நாடு |
373 |
3404 |
9756 |
18409 |
7. |
ஹரியானா |
0 |
0 |
0 |
13309 |
8. |
பஞ்சாப் |
0 |
0 |
0 |
51425 |
9. |
ராஜஸ்தான் |
0 |
0 |
0 |
1610 |
|
மொத்தம் |
29307 |
85927 |
534731 |
1250833 |
பி.டி.பருத்திக் கலப்பினம் பயிரிடப்படும் பரப்பு 2006-2007 (இலட்சம் எக்டரில்)
மாநிலம் |
மொத்த மாநிலப் பரப்பு |
பி.டி.பருத்தி கலப்பினப் பரப்பு |
பி.டி.பருத்தி பரப்பு (சதவீதம்) |
பஞ்சாப் |
6.18 |
2.81 |
45.5 |
ஹரியானா |
5.33 |
0.42 |
7.9 |
ராஜஸ்தான் |
3.08 |
0.05 |
1.6 |
குஜராத் |
23.90 |
4.07 |
17.0 |
மகாராஷ்டிரா |
31.24 |
16.55 |
53.0 |
மத்தியபிரதேசம் |
6.66 |
3.02 |
45.3 |
ஆந்திரப்பிரதேசம் |
9.48 |
6.57 |
69.3 |
கர்நாடகா |
3.56 |
0.80 |
22.5 |
தமிழ்நாடு |
0.94 |
0.32 |
34.0 |
மொத்தம் |
91.37 |
34.61 |
37.90 |
|