உயிரித் தொழில்நுட்பம் :: இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் நிலை


பி.டி.பருத்தியானது இந்தியாவில் முதன்முதலில் வணிகரீதியாகப் பயிரிடப்பட்ட பயிராகும். 2002 ம் ஆண்டு இந்திய அரசு பி.டி பருத்தி (போல் கார்டு) க்கு அனுமதி வழங்கி உள்ளது.  கடந்த ஆறு ஆண்டுகளில் சீரான வளர்ச்சியும், மேலும் 75 சதவீதம் பருத்தியின் சாகுபடிப் பரப்பு அதிகரித்தும் உள்ளது.  பி.டி.பருத்தியின் உற்பத்தித் திறன் 2002 ம் ஆண்டு 150 இலட்சம் பேல்லிலிருந்து 2007 ல் 270 இலட்சம் பேல்களாக அதிகரித்துள்ளது. ஒரு எக்டரின் மகசூல் 300 கி.கிலிருந்து 500 கி.கி ஆக அதிகரித்துள்ளது.  இதன் மூலம் உலகின் ப ருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2 ம் நிலையைப் பெற்றுள்ளது. 

பி.டி.பருத்தி இந்தியாவில் பயிரிடும் பரப்பளவு

வருடம் பரப்பு (1000 எக்டர்கள்)
2002 50
2003 100
2004 500
2005 1300
2006 3800
2007 6200

biotech_gmcrop_ststusinindia_clip_image002 
அனுமதிக்கப்பட்ட பி.டி. பருத்தி ‘நிகழ்வுகள்’

  1. போல் கார்டு 1 பருத்திக் கலப்பினம் (பருத்தி நிகழ்வு 535 Cry 1 AC) ) மஹிக்கோ மான்சான்டோ பயோடெக் (இந்தியா) லிமிடெட்
  2. போல் கார்டு 2 (மான்சான்டோ நிகழ்வு MON 15985 -Cry  1 AC and Cry 2 Ab )
  3. இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - கோரக்பூர் Cry Ac ஜீன் (ஜே.கே. அக்ரி ஜெனிடிக்ஸ் லிமிடெட்)
  4. சீனா பி.டி.பருத்தி - இணைவு (Cry 1 AC, Cry Ab பி.டி.ஜீன்) (நாத் விதைகள்)

அங்கீகாரம் பெற்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் வயல்வெளி ஆய்வு - 2008

பயிர் மாற்றயமைத்த பண்பு ஜீன் நிறுவனம்
கத்தரி பூச்சி எதிர்ப்புத் திறன் Cry 1 AC மஹிக்கோ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 
யூ.ஏ.எஸ்
அரிசி பூச்சி எதிர்ப்புத்திறன் Cry 1 AC
Cry 1 AB
Cry 1 AC
மஹிக்கோ
பருத்தி பூச்சி எதிர்ப்புத்திறன் Cry 1 AC 
Cry 1 F
டவ் அக்ரோ சயின்ஸ்
  பூச்சி எதிர்ப்புத்திறன் Cry 1 AC
Cry 1 EC
ஜே.கே.அக்ரி ஜெனிடிக்ஸ் லிமிடெட்
  பூச்சி எதிர்ப்புத் திறன் மற்றும் களைக் கொல்லித் தாங்கும் திறன் Cry 1 AC
Cry 2 AB
CP4EPSPS
மஹிக்கோ
  பூச்சி எதிர்ப்புத் திறன் Cry 1C மெட்டா ஹெலிக்ஸ்
  பூச்சி எதிர்ப்புத் திறன் Cry 1 AC சி.ஐ.சி.ஆர்
வெண்டைக்காய் பூச்சி எதிர்ப்புத் திறன் Cry 1 AC மஹிக்கோ
தக்காளி லைக்கோபீன்  அதிகரிப்பு Un edited NAD 9 அவஸ்தாஜென்

தொடர்புடைய இணையதளங்கள்:

http://dbtbiosafety.nic.in/
http://igmoris.nic.in/
http://www.envfor.nic.in/divisions/csurv/geac/geac_home.html 
Fig:http://www.isaaa.org/RESOURCES/PUBLICATIONS/BRIEFS/35/EXECUTIVESUMMARY/images/
default_clip_image002_0002.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013