பயிர்களின் மரபியல் பண்புகளை மாற்றி மனிதர்களுக்குப் பயன்படும் வகைகளில் மாற்றியமைக்கும் அறிவியலின் ஒரு வகையே பயிர்ப் பெருக்க முறை / பயிர் இனப்பெருக்க முறை என்றழைக்கப்படுகிறது. இந்தப் பயிர்ப் பெருக்க முறையானது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரீக காலம் தொடங்கியதிலிருந்தே ஆரம்பத்திருக்கின்றது. பல்வேறு உத்திகளைக் கொண்டு, தேவைப்படும் பண்புகளுக்கு ஏற்றவாறு தாவரங்களைத் தேர்ந்தெடுத்தலும் பயிர்ப்பெருக்க முறைகளில் ஒன்றாகும்.
பயிர்ப்பெருக்க முறையில் பூச்சி நோய், மற்றும் பிற காரணிகளைத் தாங்கி வளரும் புதிய இரகங்களை கண்டறிவதற்கு பெரிதும் வழிவகை செய்கிறது.
பேணி வளர்த்தல்
கீழ்க்கண்ட வரைபடத்தின் மூலம் தாவரங்களின் அந்தந்த இடங்களில் பேணி வளர்க்கப்படுகின்றன என்பதைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சில சமயங்களில் பாரம்பரியத் தொடர்புடைய செடிகளை பேணி வளர்ப்பதும் பயிர் இனப்பெருக்க முறைக்கு வழிவகுக்கின்றன. மனிதன் பல ஆண்டுகளாக தனக்குத் தேவையான பண்பியல்புகள் கொண்ட தாவரங்களை உருவாக்குவதே பேணி வளர்த்தல் என்றழைக்கப்படுகிறது. தற்போது காணப்படும் பெரும்பாலான இரகங்கள் பேணி வளர்த்தல் மூலம் உருவாக்கப்பட்டவையாகும்.
பழமையான பயிர் இனப்பெருக்கமுறை
ஒன்றுக்கொன்று நெருங்கிய (அல்லது) தொலைதூரத் தொடர்புடைய தாவரங்களை கலப்பினம் செய்தல், இவ்வாறு இரண்டு வேறுபட்ட பண்பியல்புகள் கொண்ட தாவரங்களை கலப்பினம் செய்யும் போது உருவாகும் சந்ததி, உயர் பண்பு கொண்ட தாவரத்தின் பண்பியல்புகளைப் பெற்றிருக்கும்.
இவ்வகையான இனப்பெருக்க முறைியல் பெரும்பாலும் சமமான மறு இணைவு மூலம் குரோமோசோம்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்தி மரபணு ரீதியாக பன்மைத் தாவரங்கள் உருவாக்கப்படுகிறது. மேலும் இதில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீரிய ஒட்டு இரகங்கள் உருவாக்கப்படுகின்றன.
பயிர்ப்பெருக்க வல்லுநர்கள் நூறு ஆண்டுகளாக பல்வேறு பண்பியல்புகளைக் கொண்ட தாவரங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவையாவன.
- உயர் விளைச்சல் மற்றும் உயர் தரம் மிக்கப் பயிர்கள்
- சாதகமற்ற சூழ்நிலையை (வறட்சி, உவர் மற்றும் களர் தன்மை தாங்கி வளரும் தன்மை மற்றும் பிற)
- வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொண்ட தாவரங்களை உருவாக்குதல்.
- பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட தாவரங்களை உருவாக்குதல்.
- களைக் கொல்லிகளின் செயல்திறனை தாங்கி வளரும் தாவரங்கள்.
நவீன பயிர்ப்பெருக்க முறை
மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்தி, தேவையான பண்பியல்புகளைக் கொண்ட தாவரங்களை உருவாக்குவதே நவீன பயிர்ப்பெருக்க முறை என்றழைக்கப்படுகிறது.
பயிர்ப்பெருக்க வழிமுறைகள்
- வேறுபாடுகளை உருவாக்குதல்
- தேர்ந்தெடுத்தல்
- மதிப்பிடுதல்
- வெளியிடுதல்
- பன்மடங்கு பெருக்குதல்
- புதிய இரகங்களைப் பரப்புதல்
பயிர் இனப்பெருக்க வகை
தாவரங்களில் இருவகையான இனப்பெருக்க முறை காணப்படுகிறது.
- பாலியல் இனப்பெருக்க முறை
- பாலியல்லா இனப்பெருக்க முறை
பாலியல் இனப்பெருக்க வகையில் ஆண் பாகம் மகரந்தத்தாள் தொகுப்பு எனவும் பெண்பாகம் சூலக வட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆண் கேமிட்டுகள் மகரந்த நுண் துகளிலிருந்து (மைக்ரோஸ்போர்) பெண் கேமிட்டுகள் கரு உற்பத்தி செல்லிருந்தும் (மெகா ஸ்போர்) உருவாகிறது.