தாவரங்களில் இருவகையான இனப்பெருக்க முறை காணப்படுகிறது.
1. பாலியல் இனப்பெருக்க முறை
2. பாலியல்லா இனப்பெருக்க முறை
பாலியல் இனப்பெருக்க வகையில் ஆண் பாகம் மகரந்தத்தாள் தொகுப்பு எனவும் பெண்பாகம் சூலக வட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆண் கேமிட்டுகள் மகரந்த நுண் துகளிலிருந்து (மைக்ரோஸ்போர்) பெண் கேமிட்டுகள் கரு உற்பத்தி செல்லிருந்தும் (மெகா ஸ்போர்) உருவாகிறது.
பாலியல் இனப்பெருக்க முறை
ஆண் மற்றும் பெண் கேமிட்டுகள் இணைவதால் உருவாகும் கருவிலிருந்து தாவரங்கள் உருவாகும் முறைக்கு பாலியல் இனப்பெருக்க முறை என்று பெயர்.
ஸ்போரோஜெனிசிஸ்
மைக்ரோஸ்போர் மற்றும் மெகாஸ்போர்கள் உருவாகும் தன்மை ஸ்போரோஜெனிசிஸஷ் என்றழைக்கப்படுகிறது.
மைக்ரோ ஸ்போரோஜெனிசிஸ்
மகரந்தப் பைகளிலிருந்து மைக்ரோஸ்போர்கள் உருவாதல்.
மெகா ஸ்போரோஜெனிசிஸ்
சூல்பையிலிருந்து மெகாஸ்போர்கள் உருவாகும் முறை.
கேமிட்டோ ஜெனிசிஸ்
ஆண் மற்றும் பெண் கேமிட்டுகள் உருவாகும் முறை
மைக்ரோகேமிட்டோஜெனிசிஸ்
ஆண் கேமிட்டுகள் உருவாகும் முறைக்கு மைக்ரோ கேமிட்டோஜெனிசிஸ் என்று பெயர்.
மெகா கேமிட்டோஜெனிசிஸ்
பெண் கேமிட்டுகள் உருவாகும் முறைக்கு மெகாகேமிட்டோஜெனிசிஸ் என்று பெயர்.
கருத்தரித்தல்
ஆண் மற்றும் பெண் உயிரணுக்கள் இணைந்து கருமுட்டை உருவாவதை கருத்தரித்தல் என்கின்றோம்.
பாலியலில்லா இனப்பெருக்கம்
ஆண், பெண் கேமிட்டுகள் துணையில்லாமல் தாவரங்களை உற்பத்தி செய்யும் முறையாகும். இவ்வகையான இனப்பெருக்க முறை தாவர உடலின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்தோ அல்லது உடல கரு சூழ்தசை (எண்டோஸ்பர்ம்)யிலிருந்து உற்பத்தியாகும் முறையாகும். இது இருவகைப்படும்.
1. உடல இனப்பெருக்கம்
2. அபோமிக்ஸிஸ்
உடல இனப்பெருக்கம் மேலும் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
i. இயற்கை உடல இனப்பெருக்கம்
ii. செயற்கை உடல இனப்பெருக்கம்
இயற்கை உடல இனப்பெருக்கம்
இயற்கையாகவே மண் அடிப்பகுதியிலுள்ள தாவரங்களின் தண்டுகள், கிழங்குகள், வேர்கள் போன்றவற்றிலிருந்து புதிதாக தாவரங்கள் உற்பத்தியாகின்றன.
எ.கா மஞ்சள், உருளைக்கிழங்கு, வெங்காயம், வெள்ளைப் பூண்டு.
செயற்கை உடல இனப்பெருக்கம்
செயற்கை முறையில் தாவரங்களை பாலியலில்லா இனப்பெருக்க முறையில் உற்பத்தி செய்தல்.
எ.கா.
திராட்சை, ரோஜா, எலுமிச்சை வகைகள், சீனிக்கிழங்கு முதலியன பதியம் போடுதல், ஒட்டுக்கட்டுதல் போன்ற தொழில் நுட்பங்கள் பழக்கன்றுகள் மற்றும் அலங்காரத் தாவரங்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகிறது.
இதில் நான்கு வகைகள் உள்ளன.
1. பார்தினோஜெனிசிஸ்
2. அபோகேமி
3. அபோஸ்போரி
4. அடவென்டிவ் எம்பிரியானி |