பயிர் காப்பீட்டு :: நெற்பயிர் / அரிசியிற்கான காப்பீடு தொகை உச்ச எல்லை மற்றும் வெகுமதி விகிதங்கள்

நிதி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்

  • புதிய பயிர்க்காப்பீடு திட்டம், அதாவது தேசிய விவசாய காப்பீடு திட்டம் (என்ஏஐஎஸ்) நமது மாநிலத்தில் 2000 கரீஃப் பருவத்திலிருந்து அனைத்து விவசாயிகளின் (கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் பெறாதவர்கள்) நன்மைகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
  • இத்திட்டம் பரவலாக உணவுப் பயிர்கள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் ஓராண்டு வணிக தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்புறுதி வழங்கும். குறிப்பிட்ட பகுதிகள், பயிர்கள் மற்றும் வெகுமதி விகிதங்கள் போன்ற குறிப்பிடப்பட்ட விவரங்களுக்கு பயிர் காப்பீட்டிற்கான மாநில அளவு ஒருங்கிணைப்பு வழங்கிய அறிக்கையை காணுக.

கடன் பெற்ற விவசாயிகள்

  • குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட பயிர்களுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து பருவகால விவசாய செயல்பணிகளுக்கு முழுமையான கடன் தொகை பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும், இத்திட்டத்தின் மூலம் கட்டாய காப்பீடு காப்புறுதி வழங்கப்படும்.
  • கடன் பெற்ற தொகைக்கு மேலேயும் கூடுதலான காப்புறு இத்திட்டத்தின் மூலம் (விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப) வழங்கப்படும்.
  • உத்திரவாத மகசூல் மதிப்பு வரைக்கும் சாதாரண வெகுமதி விகிதங்கள் மற்றும்.
  • 150 சதவிகிதம் சராசரி மகசூல் மதிப்பு வரைக்கும் இழப்பிற்கான வெகுமதி விகிதங்கள்.
  • இந்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையால் உத்திரவாத மகசூல் மற்றும் சராசரி மகசூலை பெருக்குவதால் முறையை உத்திரவாத மகசூல் மற்றும் சராசரி மகசூலின் மதிப்புகள் கிடைக்கும்.

வெகுமதி விவரங்கள்

வ.எண் பயிர்கள் கடன்பெற்ற மற்றும் கடன் பெற்றிராத விவசாயிகளுக்கான வெகுமதி விகிதங்கள்
உத்திரவாத மகசூல் மதிப்பு வரைக்கும் (சாதாரண விகிதங்கள்) உத்திரவாத மகசூல் மதிப்பிற்கு மேல் 150 சதவிகிதம் சராசரி மகசூல் மதிப்பு வரை (இழப்பு விகிதங்கள்)
1. கம்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் காப்பீடு தொகையில் 3.5 சதவிகிதம் அல்லது இழப்பு விகிதம், குறைவாக இருக்கும் எதுவாயினும் இழப்பு விகிதங்கள்
2. தானியங்கள், பிற சிறு தானியங்கள் மற்றும் பயிர்வகைகள் காப்பீடு தொகையில் 2.5 சதவிகிதம் அல்லது இழப்பு விகிதம், குறைவாக இருக்கும் எதுவாயினும் இழப்பு விகிதங்கள்
3. ஓராண்டு வணிக / தோட்டக்கலைப் பயிர்கள் இழப்பு விகிதங்கள் இழப்பு விகிதங்கள்

முக்கியமானது

  • கடன் பெற்ற விவசாயிகளுக்கு உத்திரவாத மகசூல் மற்றும் சராசரி மகசூல் மதிப்பிற்கு அப்பாற்பட்டு முழுமையான கடன் தொகைக்கு சாதாரண விகிதங்களுக்கே வழங்கப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீடுகளுக்கான தீர்மானத்திற்கான வெகுமதியை ஒரு வரைவுக் காசோலையாகவோ / பிற வகைகளிலோ முகமை வங்கிகள் செலுத்திவிடவேண்டும். எனினும் கடன் பெற்ற மற்றும் பெற்றிராத விவசாயிகளுக்கேற்ப தனித்தனியாக செலுத்தவேண்டும்.
  • நிதி நிறுவனங்கள், வெகுமதியிற்கான நிதி அளவுகோலை கூடுதல் கடனுக்கு மேல் நீடிக்கவேண்டும்.
  • குறிப்பிட்ட கடைசி நாளில், குறிப்பிட்ட முகமை அலுவலகங்களிலிருந்து மாதாந்திர அடிப்படையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் ஒவ்வொரு பயிர்களுக்கான ஒன்றிணைந்த பயிர் காப்பீடு திட்டறிக்கைகளை நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்கவேண்டும்.
  • கடன் பெற்றிராத விவசாயிகளுக்கான இறுதி நாளைப் பொருத்து கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தொகைக்கு கூடுதல் காப்புறுதி வழங்கப்படும்.

கிஷான் கடன் அட்டை கடன்கள்

  • கிஷான் கடன் அட்டைகள் மூலம் வழங்கப்படும் அனைத்துப் பயிர் கடன்களுக்கும், நிதி நிறுவனங்கள் கட்டாயமாக காப்புறுதி வழங்கவேண்டும். சீரான மற்றும் வெற்றிகரமான கடன் காப்புறுதிகளுக்கு தேவையான முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல் வேண்டும். அந்தப் பருவத்தில், கேசிசியின் மூலம் பெறப்பட்ட மொத்தக் கடன் தொகை ஒரு பயிர்க்கு அப்பருவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையிற்கு மேல் போனால், காப்பீடு  தொகை, கேசிசி இல் அப்பயிருக்கு கொடுக்கப்பட்டுள்ள உட் உச்சவரம்பிற்குள் இருக்கும். கேசிசியின் நுகர்வு, நடுத்தர காலக் கடன்கள், அதைச் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் காப்பீடு பெறாதப் பயிர் கடன்கள் போன்றவைகள் காப்புறுதி பெறுவதற்கு தகுதியல்லாதவைகள்.
  • பயிர்க்கடன்கள் தொடர்பாக ஆர்பிஐ / நபார்டு வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களுக்கேற்ப, நிதி நிறுவனங்கள் செயல்படவேண்டும்.

கடன் பெற்றிராத விவசாயிகள்

  • கடன் பெற்றிராத விவசாயிகளுக்கும், அவர்களின் விருப்பத்திற்கேற்ப காப்புறுதி வழங்கப்படும்.
  • நிதி நிறுவனங்கள், கடன் பெற்றிராத தனி நபர் விவசாயிகள் கோரும் காப்புறுதியில் ஏற்றுக் கொள்ளுதல் திட்டறிக்கை பரிசோதித்தல், வெகுமதி ஏற்றுக்கொள்ளுதல் திட்டறிக்கைகளை ஒன்றிணைத்தல் மற்றும் குறிப்பிட்ட இறுதி நாட்களுக்குள் தங்களுடைய சேவை பகுதிக்கு இருக்கும் நியமிக்கப்பட்ட முகமை அலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

பொது சேவைக் கட்டணம்

  • அப்பருவத்தின் இறுதியில் கடன் பெற்ற மற்றும் கடன் பெற்றிராத விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வெகுமதியிலிருந்து 2.5 சதவிகிதம் சேவைக் கட்டணமாக நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
  • கடன் பெற்ற மற்றும் கடன்  பெற்றிராத விவசாயிகளுக்கு, இணைத்துள்ள நெறிமுறைவிற்கேற்ப தனித்தனி தீர்மான அறிவிப்பு படிவங்களை பயன்படுத்தவேண்டும். நிதி நிறுவனங்கள் தேவையான எண்ணிக்கையில் தீர்மான அறிவிப்பு படிவத்தை தங்கள் செலவில் வாங்கிக் கொள்ளலாம்.
  • முகமை வங்கிகள் அனைத்துப் பயிர் கடன்களுக்கும் காப்புறுதி பெற்றிருப்பதை உறுதி செய்யவெண்டும் மற்றும் தங்கள் சட்ட எல்லைக்குள் இருக்கும் அனைத்து நிதி நிறுவனங்களிடமிருந்து முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறலாம். அது மட்டுமல்லாமல், கடன் பெற்றிராத விவசாயிகளிடமிருந்து இறுதி நாட்களுக்குள் காப்புறுதியிக்கான திட்டறிக்கை பெற்றிருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.
  • உரிய வெகுமதிகள் விகிதங்கள், வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து தெரிந்து கொண்டு, வெகுமதியை துல்லியமான கணக்கிட (காப்பீடு தொகை x வெகுமதி விகிதம்) வேண்டும். சிறு  மற்றும் குறு விவசாயிகள் ( 2எக்டருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்) மட்டும் நிகர வெகுமதி (மானியம் கழிக்கப்பட்ட முழுமையான வெகுமதி) செலுத்தவேண்டும். பின்னாளில் அதிகமான வெகுமதி செலுத்தினால் காப்பீடு தொகை அதிகமாவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
  • நிதி நிறுவனங்கள் சமர்ப்பித்த தீர்மானங்களின் ஏதேனும் தெளிவான விவரங்கள் வேண்டுமென இந்திய பொது காப்பீடு நிறுவனம்  (ஜிஐசி) கேட்டால், கேட்ட இரண்டு வாரத்திற்குள் அவ்விவரங்களை அளிக்க வேண்டும். அதன் பிறகு கொடுக்கப்படும் விவரங்களை ஜிஐசி ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பணக்கோரல்கள் மறுபரிசீலனை உட்பட இறுதி நாட்களுக்குப் பிறகு பெறப்படும் தீர்மானங்கள் திட்டறிக்கைகளுக்கான பொறுப்பு / திருப்பிக் கொடுக்கு வேண்டியவைகள் முகமை வங்கிகள் / நிதி நிறுவனங்களைச் சாரும். தவிர்த்தல் / சேவைக்கட்டணம் / தவறுகள் போன்றவை நிதி நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்கு மட்டுமே அவர்கள் பொறுப்பாவார்கள்.
  • பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் கொடுக்கும் மகசூல் தகவல்களைக் கொண்டு பணக்கோரல்களுக்கு தீர்வு காணப்படும். இத்தகவல்களை உற்பத்தி கணக்கீடுகளுக்காக முறையாக எடுக்கப்பட்ட பயிர் (திட்டமிட்ட பயிர் மகசூல் போட்டி) கொண்டு பெறப்பட்டதாகும். அன்னாவரி, வறட்சி தீர்மான அறிவிப்பு, வெள்ளத் தீர்மான அறிவிப்பு, அரசிதழ் வெளியீடுகள் போன்ற மற்ற பிற அடிப்படைகளிலோ மற்றும் மற்ற பிற துளைகள் / அதிகாரிகலாளோ தீர்வு செய்யப்படாது.

தோட்டக்கலை / மலைப்பயிர் (இடுபொருள்) உடன்பாடு திட்டறிக்கை படிவம்

1. முன்மொழிபவரின்  பெயர்      :
2. முகவரி    :
3. தொழில் (விவசாயமல்லாத பிற) :
4. தோட்டக்கலை / மலைப்பயிர்கள் :      கரும்பு
விவரங்கள்         
1. கிராமம் / தாலுக்கா    :
2. மாவட்டம்        :
3. மாநிலம்           :

பயிரின் பெயர் ரகம் கருத்தாய்வு காட் நெ. ஹிஸ்ஸா நெ. பரப்பளவு நெ. பயிரின் வகை மண்ணின் ஆழம் மண்ணின் கார அமில தன்மை
                 
                 
                 

செடிகளின் எண்ணிக்கை செடிகளுக்கிடையேயென இடைவெளி செடியின் வயது நடவு செய்த நாள் / மாதம் எதிர்ப்பார்க்கப்படும் அறுவடை நாள் / மாதம் காப்பீடு தொகை
           
           
           
    1. செடிகள் முழுமையாக வளர்ந்து, நல்ல நிலையில் உள்ளதா ?
    2. செடிகள் நல்ல நிலையில் இல்லை என்றால், ஏற்பட்டுள்ள குறைபாடு / நோய் என்ன ?
    3. பரிந்துரைக்கப்பட்ட உர அளவு என்ன?
    4. ஒரு வருடத்திற்கு கொடுக்கப்பட்ட உர மற்றும் எருவின் அளவு என்ன?
    5. நீரின் ஆதாரம் என்ன ? வருடம் முழுவதும் கிடைக்கின்றதா ?
    6. செடிகள் எவ்வாறு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றன ?
    7. ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனத்தின் இடைவெளி என்ன ?
    8. பயன்படுத்தும் நீர் ஆதாரம் கோடைக்காலத்தில் வற்றினால் மாற்று ஏற்பாடு என்ன ?
    9. பின்பற்றிய பயிர்ப் பாதுகாப்பு முறைகள் என்ன ?
    10. பின்பற்றிய மற்ற பிற விவசாய செயல்பாடுகள் யாவை ? (மேலே குறிப்பிடாதவைகள்)
    11. நிறுவனங்கள் / வியாபாரிகளிடம் பயிர் அடகு வைக்கப்பட்டிருக்கின்றதா ? அப்படி இருந்தால், அதன் விவரங்கள் கொடுக்கவும்.
    12. பயிர் செய்யப்பட்டிருக்கும் நிலம் உங்களுக்கு சொந்தமானதா ? இல்லை என்றால் காப்பீடு எவ்வளவு ?
    13. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ?
    14. காப்பீடு  செய்யப்பட்ட நிலம் மிகவும் கீழே அமைந்துள்ளதா ? (வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் சாத்தியம்)
    15. விதைகளின் ஆதாரம்
    16. நடவுப் பொருட்களின் (விதை, நாற்று, மொட்டு ஒட்டு கட்டிய தண்டு துண்டுகள்)
    17. காப்பீடு பெறப்போகும் பயிர் இப்பகுதியில் வழக்கமாக பயிரிடப்படும் பயிரா அல்லது சோதனை முறையில் பயிரிடப்பட்டதா ?

முந்தைய இழப்பு அனுபவம் (குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள்)

வருடம் இழப்புத் தொகை இழப்பின் தேதி இழப்பு ஏற்பட்டதற்க்கான காரணம்
       

அனைத்து திசைகளிலும் 50 அடிக்குள் எல்லையை ஒட்டி நிலங்களின் பயன்பாடடடை பட்டியலிடுக.

கிழக்கு      :
வடக்கு      :
தெற்கு       :
மேற்கு       :

  • நிலச்சொத்தின் வரைபடம் (எல்லைக்குள் குறிக்கும் வரையம்) மற்றும் சுற்றியுள்ள நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் விவரம் கொடுக்கவும்.
  • ஊடு பயிர் செய்யும் முறை உள்ளதா ? ஆம் என்றால் விவரங்கள் கொடுக்கவேண்டும்.
  • நிதி அளிக்கும் நிறுவனம் / வங்கியின் பெயர் மற்றும் முகவரி
  • நிறுவனம் / வங்கியிடமிருந்து பெறப்பட்ட நிதி
  • NABARDன் மறுநிதியளிப்பு சம்மந்தப்பட்டதா : ஆம் / இல்லை
  • முந்தைய காப்பீடு பற்றிய வரலாறு
  • எந்த நிறுவனமானது உங்கள் சொத்திற்கு காப்புறுதி வழங்க தவிர்த்துள்ளதா ?
  • எந்த நிறுவனமானது உங்கள் காப்பீடு உடன்பாட்டை இரத்து செய்துள்ளதா ?
  • எந்த நிறுவனமானது எந்த உடன்பாட்டையாவது புதுப்பிக்க மறுத்துள்ளதா ?
  • முந்தைய காப்பீட்டாளர்களின் பெயர்
  • காப்பீடு தொகை
  • வெகுமதி
  • பணக்கோரல்கள், ஏதேனும்
  • எந்த நிறுவனமானது ஏதாவது கட்டுப்பாடுகள் மற்றும் சிறப்பு நிபந்தனைகளை திணித்ததா? அப்படியென்றால், விவரம் கொடுக்கவும்.
  • மலைத்தோட்டம் இருக்கும் நிலத்தை வேறு ஏதாவது பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கபட்டுள்ளதா ?
  • அடமான ஏற்பாடுகள் ஏதேனும் செய்திருந்தால், விவரங்கள் கொடுக்கவும்.
  • நீங்கள் ஏதாவது தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் பெறுகிறீர்களா? ஆம் என்றால், விவரங்கள் கொடுக்கவும்.
  • நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி
  • நபரின் பெயர் மற்றும் தகுதிகள்
  • வழிகாட்டுதல்களின் விவரங்கள்
  • திட்ட விவரங்களை முழுமையாக படித்த பிறகு தானே பூர்த்தி செய்த திட்டறிக்கை படிவம் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறேன்.
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அறிக்கைகள் மற்றும் பதில்களுக்கு, என்னுடைய அறிவிற்கும், நம்பிக்கைக்கிற்கும் உண்மையான மற்றும் உரிய விவரங்களாகும். இடர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் எந்த ஒளிவு மறைவின்றி கொடுத்துள்ளேன். கொடுத்துள்ள அறிக்கைகள், பதில்கள் மற்றும் விவரங்களைக் கொண்டே, காப்பீடு வழங்கப்படும் என்பதை புரிந்து கொண்டு சம்மதிக்கின்றேன். காப்பீடு செயல்படும் பொழுது, கொடுத்துள்ள அறிக்கைகள், பதில்கள் மற்றும் தகவல்கள் தவறானது என்று தெரியவந்தால், காப்பீடு நிறுவனம், காப்பீடை திருப்பித் தராது.
இடம் :
தேதி :
(முன்மொழிபவரின் கையொப்பம்)
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014