வர்ஷா பீமா – 2005
பின்னணி
நம் நாட்டின் 65% வேளாண் தொழில் இயற்கை காரணிகளையே சார்ந்துள்ளது. அதில் மிக முக்கியமானது மழை ஆகும். பயிர்களின் 50% மகசூல் வேறுபாட்டிற்கு முக்கிய காரணம் மழைபொழிவின் மாற்றமே ஆகும். வானிலை காரணிகளில் அதிக மாற்றம் காணப்படுகிறது. அதிலும் மழையை பற்றி திட்டமாக முன்கூட்டியே அறிய முடிவதில்லை. நம்மால் இயற்கையான வானிலை காரணிகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், மழை போன்றவற்றால் விவசாயிகளின் குடும்ப வருமானத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும்.
மேலே
நோக்கம்
மழைபற்றாக்குறையினால் ஏற்படும் மகசூல் இழப்பீட்டிற்காக பாதுகாப்பு அளிப்பதே பீமா வர்ஷா திட்டத்தின் நோக்கம்.
மேலே
பொதுவான நலன்கள்
அனைத்து வகை விவசாயிகளுக்கும் ஏற்றது. அதாவது மழையின் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எண்ணுவோர் இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். முன்னதாக இத்திட்டம் தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்காக இருந்தது.
மேலே
காப்பீட்டுக்காலம்
இத்திட்டம் குறுகிய கால பயிர்களுக்கு ஜீன் முதல் செப்டம்பர் வரையிலும், மத்திய கால பயிர்களுக்கு ஜீன் முதல் அக்டோபர் வரையிலும், நீண்ட கால பயிர்களுக்கு ஜீன் முதல் நவம்பர் வரையிலும் இயங்குகிறது. மேலும் இத்திட்டம் மாநிலத்திற்கேற்ப வேறுபடலாம். விதைப்பு பொய்த்து, பின்னர் வந்தால் ஜீன் 15லிருந்து ஆகஸ்ட் 15 வரை.
மேலே
எவ்வாறு பீமா வர்ஷாவை வாங்க முடியும்?
கடன் வசதியுள்ள அனைத்து கூட்டுறவு, வணிக, கிராம வங்கி கிளைகளிலும் இத்திட்ட படிவங்கள் கிடைக்கும். தற்பொழுது இயங்கிவரும். கிராமப்புற நிதி நிறுவனங்களாகிய கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக இத்திட்த்தை இயக்கலாம். அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறவனங்கள், சுய உதவி குழுக்கள், விவசாயிகள் குழுக்கள் ஆகியோர் வாயிலாக வர்ஷா பீமா திட்ட செய்திகளை தெரிவித்து அமல்படுத்தலாம். பீமா வர்ஷா திட்டத்தீல் காப்பீடு செய்வோர் வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
மேலே
காப்பீடு வாங்கும் காலம்
சாகுபடி செய்யும் விவசாயிகள் விதைப்பு பொய்த்தால் ஜீன் 15 வரையிலும், மற்றவைகளுக்கு ஜீன் 30 வரையிலும் வர்ஷா பீமாவை வாங்கலாம்.
மேலே
வெவ்வேறு திட்ட வகைகள்
1.பருவமழை பாதிப்பிற்கான காப்பீடு
பொதுவான மழை அளவில் இருந்து 20% வேறுபாடு காணப்பட்டால் இத்திட்டம் காப்புறுதி அளிக்கிறது. ஒரு பருவத்தின் வார மழை அளவைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. இந்திய வானிலைத் துறையின் நிலையத்திற்கு நிலையமும், பயிருக்கு பயிருக்கும் ஏற்ப இக்குறியீடு மாறுபடும்.
2. ஒரு எக்டேருக்கு நேரக்கூடிய அதிகபட்ச நஷ்ட மதிப்பே, அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ஆகும். மேலும் மழைபொழிவு வேறுபாட்டைக் குறித்தும், அவற்றினால் ஏற்படும் நஷ்ட அளவைக் குறித்தும் ஈடாக கொடுக்கப்படும் தொகயைின் அளவு நிர்ணயம் செய்யப்படும. 80% மற்றும் அதற்கு மேலான வேறுபாடோ காணப்பட்டால் அதிக பட்ச காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்.
3.விதைப்பு பொய்த்தல்
ஜீன் 15 முதல் ஆகஸ்ட் 15 வரை ஏற்படக்கூடிய 40% ஏற்ற மழை தாழ்வுக்கு இத்திட்டம் காப்புறுதி அளிக்கிறது. விதைப்பு பருவம் முழுவதற்கும் ஏற்படக்கூடிய அதிகபட்ச மூலப்பொருள் செலவின் மதிப்பே அதிக பட்ச காப்பீட்டுத் தொகை ஆகும். மழை மாற்றத்தின் அளவை பொருத்து காப்புறுதி தொகை வழங்கப்படும். 80% மாற்றம் காணப்பட்டால் 100% காப்புறுதி தொகை வழங்கப்படும்.
4. பயிர் வளர்ச்சி பருவம்.
பொதுவான மழை அளவிலிருந்து 20%மாற்றம், ஆகஸ்ட் 1/ஆகஸ்ட் 16 மற்றும் செப்டம்பர் 30/அக்டோபர் 31 இல் இருந்து நவம்பர் 30 வரை காணப்பட்டால் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். அதிகபட்ச நஷ்ட மதிப்பை அதிக பட்ச காப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்யலாம் மேலும் மழை மாற்றத்தின் அளவை பொருத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். 80% மாற்றம் தென்பட்டால் 100% காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
காப்பீட்டுத் தொகை
காப்பீட்டுத் தொகை முன்பே நிர்ணயம் செய்யப்படும். இது உற்பத்தி செலவிற்கும், உற்பத்தியான பொருளின் மதிப்பிற்கும் இடையே இருக்கும். மேலும் விதைப்பு பொய்த்தலாகும் பொழுது, அதிக பட்ச மூலப் பொருள் செலவின் மதிப்பு (விதைப்பு காலம் முடியும் வரை) காப்பீட்டுத் தொகையாக கருதப்படும். இது முன்னரே நிர்ணயிக்கப்படும்.
தவணைக் கட்டணம்
தவணைக் கட்டணம், வெவ்வேறு திட்டத்தைப் பொருத்தும், பயிரைப் பொருத்தும் வேறுபடும். தவணை வீதம் 1%இல் இருந்து ஆரம்பமாகிறது.
கால அட்டவணை மற்றும் காப்புறுதி பெறும் முறை
விவசாயிகள் தங்களின் நஷ்ட விபரத்தை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை பொதுவாக மழை விபரத்தைக் கொண்டு திட்ட கால முடிவின் ஒரு மாதத்திற்குள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
காப்பி செடி சாகுபடியாளர்களுக்கான மழைக்காப்பீட்டு திட்டம் (ஸிமிஷிசி)
முக்கிய அம்சங்கள் :
1.வேளாண்மை காப்பீட்டு நிறுவனம், (RISC) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மழையினால் ஏற்படும். விளைச்சல் பாதிப்பிலிருந்து காப்பதற்காக காப்புறுதி அளிக்கப்படுகிறது.
2.பூக்கும் பருவத்தில் ஏற்படும் மழை பற்றாக்குறைக்காகவும் பருவ மழைகாலத்தில் அதிக மழை பெய்தாலும் காப்புறுதி அளிக்கப்படுகிறது (ஜீலை மற்றும் ஆகஸ்ட் – கர்நாடகா).
1. ஒரு எக்டா அராபிக்காவுக்கு ரூ.30,000 வரையிலும் ரொபஸ்டாவிற்கு ரூ.20,000 வரையிலும் காப்புறுதி அளிக்கப்படுகிறது.
2. காப்பி வாரியம், சிறு காப்பி விவசாயிகளுக்கு, (10 எக்டரோ அதற்க குறைவான காப்பி சாகுபடி) 50% தவணை தள்ளபடியாக அதிக பட்சமாக அராபிக்கவுக்கு ரூ.2500 ஏக்டர், ரொபஸ்டாவுக்கு ரூ.2000/ ஏக்டர் சலுகை வழங்குகிறது மற்ற அனைத்து காப்பி சாகுபடியாளர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
3.2007 ஆம் ஆண்டில் ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 7 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் (குறைந்தது 35மி.மீ/ஒரு நாளுக்கு) பாதிக்கப்பட்டோருக்கு காப்புறுதி வழங்கப்படும்.
|
அராபிக்கா |
ரொபஸ்டா |
8 நாட்கள் |
ரூ.3000 |
ரூ.2000 |
9 நாட்கள் |
ரூ.5000 |
ரூ.4000 |
10 நாட்கள் மற்றும் அதற்கு மேல் |
ரூ.8000 |
ரூ.6000 |
4. வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம், பருவ மழைக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஜீன் 30 2007 வரை பெறலாம். அவர்களை காப்பி வாரியத்தின் மண்டல அலுவலகங்களில் சந்திக்கலாம்.
5.மண்டலத்திற்கு மண்டலம் தவணை கட்டணத் தொகை மாறுபடும். மழைமானி நிலையங்கள் மற்றும் அவற்றின் மண்டல தவணை கட்டணை அட்டவணையைப் பார்த்து இதனை தெரிந்து கொள்ளலாம்.
6. வேளாண்மை காப்பீட்டு நிறுவனம், மழைமானி நிலையங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விபரங்களைக் கொண்டு காப்புறுதி தொகையை நிர்ணயம் செய்கிறது. சாகுபடியாளர்கள் விளைச்சல் நஷ்டத்தை சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. காப்பீட்டு காலம் முடிந்த 45 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு காப்பீட்டு பணம் அனுப்பப்படும். காப்பி வாரியத்தின் தளமான www.idiacoffee.org இல் இத்தகவல்களை பெறலாம். சாகுபடியாளர்கள் தங்கள் அருகாமையில் உள்ள காப்பி வாரியத் தொடர்பு அலுவலகங்களையும், வேளாண்மை காப்பீட்டு அலுவலர்களையும் அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ஏக்டருக்கான தவணைக் கட்டணம் : (பருவ மழைக்காக, அராபிக்கா மற்றும் ரொபஸ்டாவிற்காக) |