|
|
கீரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
|
தண்டுக்கூண் வண்டு: ஹைப்போலிக்சஸ் ட்ரங்கேட்டுலஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- தண்டின் நடுப்பகுதியில் ஒழுங்கற்ற குறுக்குநெடுக்கமான துளைகளில் பூச்சியின் கழிவுப்பொருள்கள் காணப்படும்
- தண்டுகளில் வீக்கங்களும், நீளவாக்கில் வெடிப்புகளும் காணப்படும்
- புதிய வேர்கள் மற்றும் இலைகளின் வளர்ச்சி தடைப்படும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: வெளிர் மஞ்சள்நிற நீள்வட்டவடிவ முட்டை தனித்தனியே தண்டுகளில் இடும்
- வண்டின்ப்புழு: புழு வெண்மை நிறத்தில் தடிமனாக, கால்களற்றுக் காணப்படும்
- வண்டு: வண்டுகள் சாம்பல் நிறத்தில் பழுப்பு இறக்கைகளுடன், நீண்ட மூக்கு உடையது
|
|
கட்டுப்படுத்தும் முறை:
- காட்டுவகை தண்டுக்கீரை உணவுப்பயிர்களை,கீரைவகைப்பயிர்களுக்கு அருகாமையில் இருந்தால் சேகரித்து அழிக்கவும்
- தாக்கப்பட்ட செடிகளை வண்டினப்புழுக்கள் மற்றும் வண்டுகளுடன் சேகரித்து அழிக்கவும்
- இலைகள் அறுவடைக்குப்பிறகு மாலத்தியான் 50 EC 2மி.லி/லிட்டர் தெ=ளிக்கலாம்
|
|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016 |
|
|