அசுவினி: கிரியோசோமா லேனிஜிரம்
அறிகுறிகள்:
- சாறு உறிஞ்சப்படுவதால் மரம் வளர்ச்சி குன்றிப் போகும். சில சமயம் வேர்களில் வீக்கங்கள் காணப்படும்.
பூச்சியின் விவரம்:
- இளஞ்சிவப்பான சிறிய பூச்சிகள் பஞ்சு போன்ற வெள்ளை மெழுகால் மூடப்பட்டிருக்கும், மரங்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும்.
கட்டுப்பாடு:
- அபிலினஸ் மேலி (Aphelinus mali) எனும் ஒட்டுண்ணியை மரத்திற்கு 1000 எனும் விகிதத்தில் விட்டால் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும்.
- மிதைல் டெமிட்டான் (அ) டைமீதோயேட் 1 மிலி / 1லி தண்ணீர் கலவை தெளிக்கலாம்.
- வேரில் அசுவுணி தாக்கினால் பாராடைகுளோரோ பென்சஸின் குறுணைகள் மரத்திற்கு 30 – 110 கிராம் அளவில் மரத்தைச்சுற்றி மண்ணுக்குள் போடலாம்.
|
|
|
கிளைகளில் அசுவினி |
பஞ்சுப்பொதி |
|