காட்லிங் வண்ணத்துப்பூச்சி : சிடியா போமானெல்லா
பூச்சியின் விவரம்:
- பழுப்பு நிற இறக்கையின் அடிப்புறத்தில் சிவப்பு நிற அடையாளங்களைக் கொண்ட சிறிய அந்துப்பூச்சி தன் முட்டைகளை சிறிய காய்களின் மீது வைக்கிறது.
- அதிலிருந்து வெளிவரும் செந்நிற புழுக்கள் பழங்களின் உள்ளே சென்று தின்று சேதப்படுத்தி, பழங்களை உதிரச்செய்யும். கூட்டுப்புழுக்கள் தண்டுப்பகுதியில் மரப்பட்டைகளுக்கிடையில் காணப்படும்.
கட்டுப்பாடு:
- உதிர்ந்த பழங்களைப் பொறுக்கி எரித்தல்.
- தண்டுப்பகுதியில் காணப்படும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்தல்.
- கார்பரில் 50 சதம், 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கலந்து தெளித்தல்.
|
|
|
ஆப்பிளை சேதமடையச் செய்தல் |
சேதமடைந்த இடம் |
|