தண்டுத் துளைப்பான்: ஏபோரினா சைனிரா
அறிகுறிகள்:
- வட்ட வடிவ துளைகளை ஏற்படுத்தி, அந்தத் துளைகளைச் சுற்றிலும், அதன் கழிவுகள் சூழ்ந்திருக்கும்.
- மரத்தில் உள்ளவற்றை துளைத்து உண்ணுகின்றன.
- பட்டை துளைக்கப்பட்டு, இலைகள் உதிர்ந்துவிடும்.
- கிளைகளில் வட்டவடிவ வலைப்பின்னல்கள் இருக்கும். மரங்கள் குட்டை வளர்ச்சியுடன் காணப்படும்.
பூச்சியின் விவரம்:
- புழு : பால் வெள்ளை நிறத்தில் அடர் பழுப்பு நிற, தட்டையான நிலையுடன் காணப்படும்.
- பூச்சி : சாம்பல் நிற வண்டுகள்
கட்டுப்பாடு:
-
புழுக்களை கொண்ட கிளைகளை அடிமரத்தில் நுழைவதற்கு முன்பே கவாத்து செய்ய வேண்டும்.
-
10 மிலி மோனோகுளேட்டோபாஸ் 36wsc உட்செலுத்தி, துளையை களிமண் கொண்டு அடைத்து விடவேண்டும்.
|
|