பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் நோய்கள்

சிரங்கு: வென்சூரியா இன்அக்குவாலிஸ்

அறிகுறிகள்:

  • அறிகுறிகள் இலைகள் மற்றும் பழங்களின் மேல் தோன்றும்.
  • இலையின் அடிப்பகுதியில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் நைவுப்புண் புள்ளிகள் போன்று தோன்றும். இந்தப் புள்ளிகள் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறி வெல்வெட் போன்று காணப்படும்.
  • இளம் இலைகளில், புள்ளிகள் கதிர் வீச்சு போன்று இறகின் விளிம்புகளில் தோற்றமளிக்கும்.
  • முதிர்ந்த இலைகளில் நைவுப்புண்கள் தெள்ளத் தெளிவாகத் தோன்றும்.
  • நைவுப் புண் குவடான மேற்பரப்பில் தோன்றி அதற்கு ஒட்டியுள்ள எதிர்புறத்தில் உள்ள குழிவில் தோன்றும்.
  • தீவிரமாக நோய்த் தாக்குதல் ஏற்படும் போது இலைத்தாள்கள் வளைந்தும், குட்டையாகவும், வடிவம் சிதைந்தும் காணப்படும்.
  • பழங்கள் சிறுத்தும், கடினமாகவும், கருப்பு நிற விட்ட வடிவ நைவுப்புண்கள் தோன்றும்.
  • புள்ளிகளின் நடுவில் தக்கைப் போன்று உருவாகும். முதிர்ந்த பழங்களில் மஞ்சள் நிற ஒளிவட்டம் நைவுப் புண்ணை சுற்றி காணப்படும்.

கட்டுப்பாடு:

  • தூய்மையாக அறுவடை செய்ய வேண்டும். இனப்பெருக்க சுழற்சியை பாதுகாக்க உதிர்ந்த இலைகள் மற்றும் குளிர் காலங்களில் வெட்டிய கொம்புகளை அகற்றிவிட வேண்டும்.
  • 0.1%ட்ரிடமார்ஃப்பை பூ பூர்க்கும் முன் தெளிக்கவும்.
  • செடிகளை தாங்கக்கூடிய பருவத்தில் 0.25% மேன்கோசெப்பை தெளிக்கவும்.
  • 5%யூரியாவை இலையுதிர் காலத்தில் தெளிக்கவும் 2%யூரியாவை மொட்டுகள் உடையும் முன் தெளிக்கவும்.

வ.எண்

மரத்தின் நிலைகள்

பூசணக்கொல்லி/100 லி

1. வெள்ளை நூனியிருந்து பச்சை நூனியாக கேப்டாஃபோல் 200 கிராம் (அ) கேப்டான் 300 கிராம் (அ) மேன்கோசெப் 400 கிராம்
2. இளஞ்சிவப்பு மொட்டு (அ) 15 நாட்களுக்கு பிறகு முதல் தெளிப்பு கேப்டான் 250 கிராம் (அ) மேன்கோசெப் 300 கிராம்
3. இதழ்கள் உதிர்ந்துவிடும் கார்பன்டாசிம் 50 கிராம்
4. 10 நாட்களுக்கு பிறகு கேப்டான் 200 கிராம் (அ) மேன்கோசெப் 300 கிராம்
5. பழங்கள் நிலையானதும் 14 நாட்களுக்கு பிறகு கேப்டாஃபோல் 150 கிராம்
  • ஒட்டுப்படத்தை சேர்க்கவும் - டீபோல் (அ) ட்ரைட்டன் 6 மிலி/10லி என்ற அளவில் தெளிக்கவும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015