பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் நோய்கள்
தீக்குருகல் நோய்: எர்வினியா அமிலோவோரா

அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில் அறிகுறிகள் இலையின் மேல் தோன்றும். பின் இலையின் மேல் நீர் கோத்தது போன்று தோன்றி, காய்ந்து பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடும் அல்லது மரத்திலேலே காய்ந்து தொங்கி காணப்படும்.
  • பின் இந்த அறிகுறிகள் கொம்புகளில் தோன்றும். ஆனைக் கொம்புகளின் நுனிகள் முதலில் காயத் தொடங்கி, கீழ் பகுதி வரை காய்ந்துவிடும். அது கிளைகள் வரை பரவி காணப்படும்.
  • பழங்களில் நீர் கோத்தது போன்று தோன்றி, பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து, இறுதியில் கருப்பு நிறமாக மாறிவிடும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கசிவு ஏற்படும்.

கட்டுப்பாடு:

  • தாக்கப்பட்ட பகுதிகளை எடுத்து அகற்றவும்
  • கருகிய கொம்புகளை அகற்றவும்
  • 500 பிபிஎம் ஸ்டெப்ரோமைசினை தெளிக்கவும்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015