பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் நோய்கள்

மென்மை அழுகல்: பெனிசிலியம் எக்ஸ்பேன்சம்

அறிகுறிகள்:

  • இளம் புள்ளிகள் முதலில் பழங்களின் தண்டின் இறுதியில் லேசான பழுப்பு நிறத்தில் நீர் போன்று அழுகி காணப்படும். பழங்கள் பழுக்க ஆரம்பித்தால் அழுகல் அதிகமாக இருக்கும்.
  • தோல்கள் சுருக்க முற்று காணப்படும்.
  • விநோதமான ஊசிப்போன நாற்றத்தை வெளிப்படுத்தும்.
  • ஈரப்பதமான நிலையில் நீலம் கலந்த பச்சை நிறத்தில் பூசண வளர்ச்சி ஏற்படும்.
  • பூச்சிகளினால் தோல்களில் புண்கள் ஏற்பட்டு அதன் வழியாக நோய் தாக்கப்படும் மற்றும் பதப்படுத்துதல், போக்குவரத்தின் போதும் தாக்குதல் ஏற்படும்.

கட்டுப்பாடு:

  • பழங்களின் மேல் எந்தப் புண்களும் ஏற்படாதவாறு பக்குவமாகக் கையாள வேண்டும்.
  • 500 பிபிஎம் ஏரோஃபங்கின்சாலில் பழங்களை 20 நிமிடங்கள் முக்கி வைத்தால் நோய்த் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்தலாம்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015