கசப்பழுகல் - க்ளோமெருலா சிங்குலேட்டா
அறிகுறிகள்:
- தோல்கள் வலுவுற்று, லேசான பழுப்பு நிறத்தில் நிறம் மாறிக் காணப்படும். நிறம் மாற்றம் கூம்பு வடிவத்தில் பெரியதாகும். வட்டவடிவ, கடினமான நைவுப்புண்கள் அழுத்தமுற்று காணப்படும். நைவுப்புண்கள் அதிகமாகி பழம் முழுவதையும் மூடிவிடும்.
- புறத்தோலில் சிறிய கரும் புள்ளிகள் தோன்றும் பின் இது பூசணக் கொப்புளம் போல காணப்படும்.
- இளஞ்சிவப்பு பூசண வித்துக்கள் வளையம் போன்று சீராக அமைந்திருக்கும்.
கட்டுப்பாடு:
- 0.25% மேன்கோசெப்பை வயலில் தெளிக்கவும்.
- பழங்களை பதப்படுத்தி வைக்கும் பொழுது நோயை அறிந்து கொள்ள 0.25% மேன்கோசெப்பை வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.
|
|