பயிர் பாதுகாப்பு :: பாக்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
அடிஅழுகல் (அல்லது) அனபி ரோகா : கனோடெர்மா லுயுசிடியம்
அறிகுறிகள்:
  • இலைகள் வெளிபுறம் முழுவதும் மஞ்சள் நிறமாகி, வாடி தண்டிலிருந்து உதிர்ந்துவிடுகிறது.
  • பின்னர் இலையின் உள்புறமும் மஞ்சள் நிறமாக மாறி வாடி உதிர்ந்துவிடும்
  • பின்னர் தண்டு எளிதில் உடையக்கூடியதாக மாறி கடும் காற்றில் உடைந்துவிடுகிறது.
  • தண்டின் அடியில் பழுப்பு நிறமாற்றமடைந்து அதிலிருந்து திரவம் கசியும்.
  • அடைப்புக்குறி வடிவ பூஞ்சைகள் உடற்பகுதியின் அடிப்பகுதியில் வித்துக்கலனில் தோன்றுகிறது. இதனால் வேர்கள் நிறமாற்றமடைந்து உலர்ந்து உடையக்கூடியதாக மாறுகிறது.
  • பாதிக்கப்பட்ட அடிப்பகுதியை வெட்டும் போது பழுப்பு நிறமாற்றமடைந்ததை தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் வரை பார்க்க முடியும்.
 
இலைகள் மஞ்சள் நிறமாதல் இலைகள் தொங்கி விடுகிறது பழுப்பு நிறமாதல்  

கட்டுப்பாடு:

  • சுத்தமான சாகுபடி.
  • பாதிக்கப்பட்ட மரங்கள் மற்றும் அடிக்கட்டைகளை அழித்திட வேண்டும்.
  • தேர்ந்தெடுத்த  செடியை நெருக்கமாக இல்லாமல் இடைவெளியில் பராமரிக்க வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி மற்றும் பாசனம், உரங்கள் வழங்க வேண்டும்.
  • வேர் வழியாக நோயுற்றதிலிருந்து ஆரோக்யமானவற்றிற்கு நோய் பரவுவதை தவிர்க்க வேண்டும்.
  • சரியான இடைவெளியில்  1% போர்டிக்ஸ் கலவையில்  நனைக்க வேண்டும்.

Image Source:

http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015