கம்பளிப்புழு: பேரிக்காலியா ரிசினி
சேதத்தின் அறிகுறி:
- புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டித் தின்னும், இலைகளில் ஜன்னல் போன்ற துளைகள் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- புழுக்கள் கருப்பு கலந்த வெளுப்பு நிறத்தில் நீல முடிகளுடன் காணப்படும்
- பூச்சியின் முன்னிறக்கை வெளுப்பு நிறத்தில் கரும் புள்ளிகளுடன் காணப்படும். பின்னிறக்கை இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- முட்டை குவியல்களையும், புழுக்களையும் சேகரித்து அழிக்க வேண்டும்
- கூட்டமாகக் காணப்படும் புழுக்களை தீப்பந்தம் கொழுத்தி அழிக்க வேண்டும்
- வியக்குப்பொறி அமைத்து கவர்ந்து அழிக்கலாம்
- குளோர்பைரிபாஸ் 20இ.சி (அ) குயினால்பாஸ் 25 இ.சி 2 மி.லி / லிட்டர்
|
|