பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெட்டுப்புழு: ஸ்போடாப்டிரா லிட்யூரா

சேதத்தின் அறிகுறி:

  • இளம்புழுக்கள் இலைக்கு அடியில் இருந்து கொண்டு சுரண்டித் திண்ணும். பின்பு இரவு நேரங்களில் இலைகளை அதிகமாக உண்ணும்

பூச்சியின் விபரம்:

  • புழுக்கள் இளம்பச்சை அல்லது பழுப்பு நிறத்திலும், கருமையான நிறத்திலும், காணப்படும்
  • பூச்சியின் முன்னிறக்கையில் வெளுப்பு நிறத்தில் தோன்றும் அதனுள் அலைபோன்ற வெள்ளை கோடுகள் தோன்றும், பின்னிறக்கையில் ஓரத்தில் பளுப்பு நிறக்கோடுகளும் வெள்ளை நிறத்திலும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கையில் எடுத்து புழுக்களை அழிக்க வேண்டும்
  • தாக்கப்பட்ட பகுதிகளை எடுத்து அழித்துவிடவேண்டும்
  • கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும்
  • விளக்குப்பொறி அமைத்து அழிக்கலாம்
  • அசின்பரஸ்எதில் (அ) குளோர்பைரிபாஸ்் மருந்தினை தெளிக்கலாம்
  • தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் பேஸில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ் மருந்தினை தெளிக்கலாம்
  • டெலினோமஸ் ஸ்போடாப்டிரா, டைலினோமஸ் ரிமஸ் ஆகிய முட்டை ஒட்டுண்ணிகளை விட்டு கட்டுப்படுத்தலாம்
  • நோமோரியா ரிலேயி, பூச்சிகளைக் கொல்லும் பூஞ்சாணக் கொல்லிகளை தெளிக்கலாம்

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015