பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்
பீன்ஸ் வேர் அழுகல் : ரைசோக்டினியா சொலானி, பித்தியம், ப்யூசேரியம் சொலானி

அறிகுறிகள்:

  • பல பூசணங்கள், ரைசோக்டினியா சொலானி, பித்தியம் வகைகள், ப்யூசேரியம் சொலானி, பேசோலி வகைகள் மண்ணில் வாழும் இலை இளம் நாற்றுக்கள் (அ) பீன்ஸ் விதைகளைத் தாக்கும்
  • மண்ணிற்கு சற்று மேலும் கீழும் உள்ள செடிகளின் வேர்கள் அழுகும். செடிகள் பொதுவாக மடியும் மற்றும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்

கட்டுப்பாடு:

  • தாழ்வான நீர் வடியாத பகுதிகளில் பீன்ஸ் பயிரிடக் கூடாது. உயர்வான படுக்கைகளின் மீது பயிரிட வேண்டும்
  • மண்ணை 690 பாரன்ஹீட் வெப்ப நிலையில் 4 இன்ச் ஆழத்திற்கு சூடுபடுத்த வேண்டும். தோட்டத்தில் மற்ற காய்கறிகளுடன் வெவ்வேறு இடங்களை மாற்றி மாற்றி பயிரிட வேண்டும்
  • வேர்ப் பகுதியை சேதம் ஏற்படாமல் கவனமாக கையாள வேண்டும்
  • பயிர்க் குப்பைகளை அறுவடைக்குப் பின்னர் அகற்ற வேண்டும். விதைகளை கேப்டானுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அட்டவணையில் தரப்பட்டுள்ள மாதிரி பூஞ்சாணக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015