பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள் |
துருநோய்: யூரோமைஸிஸ் அஃபென்டிகுலேட்டஸ்
அறிகுறிகள்:
- பீன்ஸ் இலைகளில் துரு நிறத்தில் புள்ளிகள் இலையின் அடிப்புறத்தில் தோன்றும்
- அதிகம் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி பின் தொங்கும்
- தண்டுகள் மற்றும் காய்களும் தாக்கப்படும் இந்த நோய் யூரோடைசிஸ் அஃபென்டிகுலேட்டஸ் பூஞ்சானால் தோன்றும்
- ஈரப்பதம் உள்ள நிலைகளில் பீன்ஸ் பயிரைத் தாக்கும்
கட்டுப்பாடு:
- குளிர் காலத்தில் மண், பயிர்க் குப்பைகள், முந்தைய வருடம் பயன்படுத்திய மூங்கில் கம்புகளின் மீது பூஞ்சாண் உயிர் வாழும். தோட்டங்களில் எங்கெல்லாம் துரு நோய் தீவிரமாக உள்ளதோ, அங்கு பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்
- பயிர்கள் பூக்க ஆரம்பிக்கும் பொழுது, சல்பர் (அ) குளோரோதாலோனில் ஒரு வார இடைவெளியில் தெளிக்க வேண்டும்
- லிமா பீன்ஸ்க்கு குளோரோதாலோனில் தெளிக்கக் கூடாது. தெளிப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் இடையில் 7 நாட்கள் காத்திருந்து குளோரோதாலோனில் தெளிக்க வேண்டும். தெற்கு மண்டல பட்டாணிகளுக்கு 14 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்
- அட்டவணையில் குறிப்பிட்ட வழிமுறைகள் படி தெளிக்க வேண்டும்.
|
|
|