பயிர் பாதுகாப்பு :: பீன்ஸ் பயிரைத் தாக்கும் நோய்கள்
சாம்பல் நோய்: எரிசிபே பாலிகோனி

அறிகுறிகள்:

  • இலைகள் முழுவதும் வெள்ளை (அ) சாம்பல் நிற பொடி போன்ற வளர்ச்சி மூடியிருக்கும். எரிசிபே பாலிகோனி என்ற பூஞ்சாண் இந்த நோய் உருவாக காரணமாகிறது
  • புதிதாக உருவாகியுள்ள வளர்ச்சி, உருமாறி, வளைந்து (அ) குட்டை வளர்ச்சியுடன், மஞ்சள் நிறமாக மாறி தொங்கும். காய்கள் குட்டை வளர்ச்சியுடன் உருமாறிக் காணப்படும்
  • காற்று மற்றும் மழை மூலம் பரவும்

கட்டுப்பாடு:

  • செடிகளை கூட்டமாக நடாமல் இடைவெளி விட்டு பயிரிட வேண்டும்
  • அறுவடைக்குப் பின் அனைத்து குப்பைகளையும் அகற்ற வேண்டும்
  • ஒரே பகுதியில் 2 (அ) 3 வருடங்களுக்கு தொடர்ந்து பயிரிடக்கூடாது
  • இந்த நோய் முதலில் புலப்படும் போது, சல்பர் தூள் (அ)சல்பர் தெளிக்க வேண்டும். இளம் செடிகள் மீது சல்பர் பயன்படுத்த கூடாது.

 

\


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015