பயிர் பாதுகாப்பு :: வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு மற்றும் காய்ப்புழு : இரியாஸ் விட்டெல்லா ; இரியாஸ் இன்சுலானா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளங்குருத்து வாடித் தொங்கும்
  • மொக்கு மற்றும் பூக்கள் உதிர்ந்து விடும்
  • காய்களுக்கு உள்ளே துளையிட்டு விதைகளை சாப்பிடும்
  • காய்கள் உருக்குலைந்து காணப்படும

பூச்சியின் விபரம்:

இரியாஸ் விட்டெல்லா

  • முட்டை: முட்டை நீள நிறமாகவும், மேற்புறம் வரிக்கோடுகளுடனும் காணப்படும்
  • புழு: பழுப்பு நிற உடலின் மேற்பரப்பில் நீண்ட, வெள்ளைக் கோடுகள் காணப்படும்
  • பூச்சி: அந்துப்பூச்சியின் முன்னிரண்டு இறக்கைகளும் பச்சை வண்ணத்தின் இடையே வெண்மை நிறம் பட்டைக் கோடுகள் காணப்படும்.

இரியாஸ் இன்சுலான்

  • புழு: பழுப்பு நிறமாகவும், உடலின் மேற்புறத்தில் பெரும் பகுதி வெண் மஞ்சளாகவும் காணப்படும். விரல்கள் போன்று சிறிய நீண்ட குழல் போல் உறுப்புகளையும் ஆரஞ்சு நிறப்புள்ளிகளையும் பெற்றிருக்கும்.
  • கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில், படகு வடிவில் இருக்கும்
  • பூச்சி: அந்துப் பூச்சியின் முன்இறக்கை முழுவதும் பச்சை நிறமாக இருக்கும்
  • கட்டுப்படுத்தும் முறை:

    • ஹெக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறி அமைத்தல்
    • பூச்சிகள் தாக்கப்பட்ட குருத்து, மொட்டு, பூக்கள் மற்றும் காய்கள் சேகரித்து அழிக்கவும்
    • முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 1,00,000 அளவுக்கு விட வேண்டும்.
    • கிரைசோபெர்லா கார்ணியா(camea) என்னும் இரை விழுங்கி பூச்சியின் முதல் நிலை புழுக்களை ஹெக்டேருக்கு ஒரு வட்சம் அளவுக்கு விட வேண்டும்
    • கார்ஃபரில் 10% DP@ 25 கிலோ/லிட்டர் தெளிக்கவும் அல்லது பெசில்லஸ் துரியன்ஜிபென்னிஸ் @ 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும் அல்லது கீழ்காணும் ஒரு பூச்சிகொல்லி மருந்தினை தெளிக்கவும்
    பூச்சிகொல்லி அளவு
    ஆசாடிராக்டின் 0.03% WSP (300 ppm) 5.0 கி / லி
    ஆசாடிராக்டின் 5% வேப்பங்கொட்டைக் கரைசல் 5.0 மி / 10 லி 
    எமாமெக்டின் பென்ஜோவேட் 5 % SG 3.0  கி / 10 லி
    போசலோன் 35 % EC 1.5 மி / லி 
    பயிரிடல்யல் 10 % EC 1.0  மி / லி 
    குயின்னால்பாஸ் 25 % EC 8.0  மி / 10 லி 

புழு மற்றும் முதிர்பூச்சி முட்டை


புழு
முதிர்பூச்சி அறிகுறி

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016