பயிர் பாதுகாப்பு :: வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு துளைக்கும் கூன் வண்டு: அல்சிஃபோட்டஸ் அபாஃபார்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும்
  • முதிர்ந்தபுழுக்கள் வட்டவடிவில் காய்களில் துளையிடும்
  • இப்புழுக்கள் காயிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின் பாதிப்பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: பெண் அந்துப்பூச்சி சொரசொரப்பான வெள்ளைநிற முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது
  • புழு: பச்சை மற்றும் பழுப்பு நிற வேறுபாடுகளை தோற்றுவிக்கும். வளர்த்த புழுக்கள் பச்சை நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பல் நிறக் கோடுகளுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு:  கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில், மண், இலை மற்றும் பண்ணைக் கழிவுகளில் காணப்படும்
  • முதிர்பூச்சி: பெண் அந்துப்பூச்சி வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும். ஆண் அந்துப்புச்சி வெளிர் பச்சை நிறத்தில் V - வடிவக் கோடுகள் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட பழங்கள் மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்
  • நாற்பது நாள் வயதுள்ள ஆப்ரிக்கன் உயர சாமந்தி பூச்செடிகளை கவர்ச்சிப்பயிராக 10 வரிசை தக்காளிசெடிக்கு 1 வரிவை பூச்செடி பயிரிடலாம்
  • இனக்கவர்ச்சிப் பொறி ஹெலியூர் ஹெக்டேர்க்கு 15 வைக்கவும்
  • முட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50, 000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விடவேண்டும்
  • கிரைசோப்பெர்லா கார்னியா எனும் இரை விழுங்கிப் பூச்சிகளை நட்ட 30ம் நாள் முதல் வாரம் ஒரு முறை 50,000 முட்டைகள் அல்லது புழுக்களை விட வேண்டும்
  • கிரைசோபெர்லா கார்ணியா(camea) என்னும் இரை விழுங்கி பூச்சியின் முதல் நிலை புழுக்களை ஹெக்டேருக்கு 50, 000 அளவுக்கு விட வேண்டும்
  • ஹெலிகோவெர்பா நியுக்ளியர் பாலிஹிட்ரோசிஸ் வைரஸ் [எச்.எ.என்.பி.வி] திரவத்தினை ஹெக்டேருக்கு 1.5x1012 புழு சமன் அளவுடன் பருத்தி விதை எண்ணெய் ஹெக்டேருக்கு 300 கிராம் அளவில் மாலை நேரத்தில் தெளிக்கவும்
  • கார்பரில் 2 கிராம்/லிட்டர் அல்லது பெசில்லஸ் துருஞ்ஐியென்சிஸ் 2 கிராம்/லிட்டர் அளவில் தெளிக்கவும்
  • காய்கள் கனிந்ததற்கு பிறகு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கக்கூடாது
துளிர்களில் துளை தாக்கப்பட்ட இளந்துளிர்கள்
துளைத்து சாப்பிடும் முதிர்பூச்சி முட்டை
புழு முதிர்பூச்சி

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016