தண்டுக்கூன் வண்டு : பெம்ஃபிருலஸ் அஃபினிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- தண்டின் அடிப்பாகத்தில் வீக்கங்கள் இருக்கும்.
- இளஞ்செடிகள் வாடிக் காய்ந்து விடும்.
- முற்றிய செடிகள் - வீரியம் மற்றும் வலிமை குறைந்து விடும். காற்று வேகமாக வீசும் பொழுது கணுக்கள் ஒடிந்துவிடும்.
பூச்சியின் விபரம்:
- வண்டினப்புழு : வெண்மையானது கால்களற்றது.
- வண்டு : சிறியதாகவும், பழுப்பு நிறத்துடனும் முதுகு பகுதியில் சிறிய வெள்ளைக் கோடுடனும் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 500 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும்.
- ஹெக்டேருக்கு கார்போஃபிரான் குறுனை 30 கிலோ (அ) ஃபோரேட் குறுனை 10 கிலோ மண்ணில் இடவேண்டும்.
|