அசுவிணி : ஏஃபிஸ் காசிப்பை
சேதத்தின் அறிகுறிகள்:
- இலையின் அடிப்பாகத்திலும், குருத்துப் பகுதிகளிலும் இலைச் சாற்றை உறிஞ்சி வாழும்
- இலைகள் சுருங்கி, சுருண்டு விழுந்து விடும்
- செடியின் வளர்ச்சிக் குன்றிவிடும்
- பூச்சியில் இருந்து வெளியேறும் தேன் போன்ற திரவம் கரும்புகை பூசணம் ஏற்படுத்துகிறது
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சு: மஞ்சள் அல்லது பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இலையின் அடிப்பகுதியில் காணப்படும்.
- பூச்சி: பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். மென்மையான உடலை உடையது.
|
|
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்):
- இமிடாகுளோஃபிரிட் 200 SL @ 100 மி.லி / ஹெக்டேர்
- மீதைல் டிமீட்டான் 25 EC @ 500 மி.லி / ஹெக்டேர்
- டைமீதோயேட் 30 EC @ 500 மி.லி / ஹெக்டேர்
- பாஸ்ஃபாமிடான் 40 SL @ 600 மி.லி / ஹெக்டேர்
- வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதம்
- இறக்கை உள்ள அசுவினிகளின் நடமாட்டத்தை அறிய மஞ்சள் வண்ண ஒட்டு பொறி வைக்கவேண்டும்
|