பயிர் பாதுகாப்பு ::அறுவடைப் பின்சார் நோய்கள்்: வெண்டை
ரைசக்டோனியா கருகல்: ரைசக்டோனியா சொலனி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • காய் பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறி திசுக்களில் பூசணம் முழுமையாக  மூடப்பட்டிருக்கும்
  • உள்ளுக்குள், முதிராத விதைகள் மற்றும் நஞ்சுக்கொடி பாதிக்கப்பட்ட திசுக்கள் பழுப்பு நிறத்தில் இருந்து கரும் நிறத்திற்கு மாறும்
  • வெளிப்புறமாக, மைசிளியாகல் பஞ்சு போன்ற, லேசான நிறத்தில்,  மேற்பரப்பில்  பெரிய ஸ்க்ளிரோசியாக்களை உருவாக்கும்.

நோயினைகண்டறிதல்:

  • பூஞ்சைகள் பிக்நீடியா மற்றும் ஸ்க்ளிரோசியாக்களை உருவாக்கும்.
  • பிக்நீடியோஸ்போர்கள் கண்ணாடி போன்று, ஒற்றை அணு கொண்டு, முட்டை அல்லது நீளுருண்டை வடிவில் இருக்கும்.

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • ஆர். சோலனிவின் மைசிளியாக்கள் பாதிக்கப்பட்ட செடிகளில் மற்றும் நீண்ட காலத்திற்கு மண்ணில் அடர் பழுப்பு ஸ்க்ளிரோசியாக்களில் இருக்கும்.
பழுப்பு விதை பூசண உள் திசு

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட செடிகளை நடவுக்கு முன்பு நீக்குதல்
  • நடவுக்கு முன்பு குயிண்டசோன் தெளிபத்தின் மூலம் இந்நோயை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
Source of Images:
Glimar P.H., Carlos A.L and Ailton R. 2007. A novel post harvest rot of okra pod caused by Rhizoctonia solani in Brazil. Fitopatol. Bra,. 32(3), pp.237-240.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015