ப்யூசேரியம் வாடல் நோய் : ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை வாஸ்இன்பெக்கட்டம்

அறிகுறிகள்:

  • தனிப்பட்ட வாடல் நோய், மஞ்சளாதல் மற்றும் குட்டை வளர்ச்சி உடைய செடிகளுடன் ஆரம்பித்து, வாடலைத் தொடர்ந்து, இலைகள் சுருண்டு காணப்படும்
  • முடிவில், செடிகள் மடிந்துவிடும்
  • நோய்த்தாக்கப்பட்ட தண்டுப் பகுதியை நீளவாக்கில் வெட்டிப் பார்த்தால், வாஸ்குலர் திசுக்கள் அடர்நிற கோடுகளுடன் காணப்படும்
  • நோய் தீவிரமாக தாக்கப்படும் போது, முழுத் தண்டும் கருப்பாக மாறும்

கட்டுப்பாடு:

  • மான்கோசெப் 3கி / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% உடன் வயலில் படுமாறு நனைக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016