பயிர் பாதுகாப்பு :: உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
புல் நீல் வண்ணத்துப்பூச்சி : யூகிரைசாப்ஸ் னிஜஸஸ் |
|
அறிகுறிகள்:
- மொட்டுக்கள், பூக்கள், இளம் காய்கள் துளைக்குழிகளுடன், நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்
- காய்களில் புழுக்கள் நுழைந்த இடத்தில் புழுவின் கழிவுகளுடன் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- புழுக்கள் : மங்கிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிற வரியுடன், சிறிய கருப்புநிற ரோமங்கள் உடலின் மீது இருக்கும்.
- தாய்ப்பூச்சி : நீல நிறத்தில் , அளவான வடிவில், 5 கருப்பு நிற புள்ளிகள் பின்னிறக்கையிலம், 2 கருப்பு நிறபுள்ளிகள் உள்விளம்பிலும் காணப்படும்.
|
|
கட்டுப்பாடு:
- இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
- எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
- வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
- பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12 கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி / லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
- கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் / தூவவும்.
- டைகுளோர்வாஸ் 625 மி.லி.
- குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி.
- கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி.
- டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி / எக்டர் இரண்டு முறை தெளிக்கவும்.
- பாசலோன் 35 இ.சி 1.25 லி.
(குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.)
- 10 % பொருளாதார சேதநிலையை அடையும்போது கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ளலாம்.
- ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
|
|
|