ஆந்தராக்னோஸ் நோய்: கொல்லட்டோடிரைக்கம் இன்டிமுத்தியானம்
அறிகுறிகள்
- பயிரின் அனைத்து பகுதிகளையும், பயிரின் எந்த நிலையையும் இந்த நோய் தாக்கும்
- வட்ட வடிவில், கருப்பு நிற நீரில் அமிழ்ந்த புள்ளிகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும். இந்த புள்ளிகளின் நடுவில் கருப்பு நிறமாகவும், ஓரங்களில் அடர் ஆரஞ்சு நிறத்துடனும் காணப்படும்.
- தீவிர தாக்குதலின் போது, தாக்கப்பட்ட பகுதிகள் உதிர்ந்து விடும்.
- விதை முளைக்க ஆரம்பித்தவுடன், நாற்றுக்கள் கருக ஆரம்பித்து விடும்
- பூஞ்சாண் விதைகள் மற்றும் பயிரின் குப்பைகளில் உயிர் வாழும்
- காற்று வழி பரவும் கொனிடியா மூலம் இந்த நோய் பரவும்.
- குளிர் மற்றும் ஈரமான காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்.
கட்டுப்பாடு
- கார்பன்டசிம் 2 கிராம் / கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்தல்
- தாக்கப்பட்ட பயிரின் குப்பைகளை அகற்றி, அழித்தல்.
- மான்கோசெப் 2 கிராம் / லிட்டர் (அ) கார்பன்டசிம் 0.5 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
|
|
|