பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

மஞ்சள்சோகை: உளுந்து  மஞ்சள்சோகை நச்சுயிரி

அறிகுறிகள்

  • பொதுவாக உளுந்து பயிரில் இந்த நோய் அதிகமாக தோன்றும்.
  • இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றும்.
  • புதிதாக தோன்றும் இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் மற்றும் பச்சைத் திட்டுக்கள் மாறி மாறி காணப்படும்.
  • புள்ளிகள் அளவு அதிகரித்து, முடிவில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • நோய் தாக்கப்பட்ட இலைகளில் நிறமிழந்து காணப்படும்.
  • பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன், காலந்தாழ்த்தி முதிர்ச்சி அடைதல், மிகக்குறைந்த அளவு பூக்கள் மற்றும் காய்களை உற்பத்தி செய்தல்.
  • நோய் தாக்கப்பட்ட செடிகளில் காய்களின் அளவு குறைந்து, மஞ்சள் நிறமாக மாறும்.

கட்டுப்பாடு

  • நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தாக்கக் கூடிய  இரகங்களான வம்பன்4, வம்பன் 5 பயிரிடுதல்
  • வரப்போர பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தைப் பயிரிடுதல்
  • இமிடாகுலோபிரிட் 70 WS 5 மிலி/கிலோ என்ற அளவில் விதைகளை நேர்த்தி செய்தல்.
  • உளுந்து மஞ்சள் சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும்.
  • டைமெத்தோயேட் 750 மிலி/ஹெக்டர் என்ற அளவில் விதைத்து 30 நாள் கழித்து தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015