பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை சுருள்வு நோய்: இலை சுருள்வு நச்சுயிரி

அறிகுறிகள்

  • மிகச்சிறிய இளம் இலைகளில் பச்சைசோகை நரம்புகள், மற்றும் இலைகளின் விளிம்புகளிலும் தோன்றும்.
  • இலைகள் விளிம்பிலிருந்து கீழ்நோக்கி சுருளும்.
  • சில இலைகள் முறுக்கிக் காணப்படும்.
  • இலையின் அடிப்பரப்பில் உள்ள நரம்புகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிற மாற்றம் காணப்படும்.
  • விதைத்து 5 வாரம் கழிவதற்குள் பயிர்களில் அறிகுறிகள் தோன்றும். செடிகள் குட்டை வளர்ச்சியுடன் காணப்படும். பெரும்பாலான பயிர்களில் நுனியில் காய்வதால் நோய் ஆரம்பித்து ஒருவாரம் (அ) 2 வாரத்திற்குள் மடிந்து விடும்.
  • பயிரின் கடைசி காலத்தில் தாக்கப்படும் பயிர்களில் இலைகள் சுருண்டோ, முறுக்கியோ காணப்படாது. ஆனால் நரம்புகளில் தெளிவான பச்சைசோகை காணப்படும்.
  • நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை 45 நாட்களுக்குள் நீக்கலாம்.
  • அசிபேட் 1கி/லி (அ) டைமிதோயேட் 2 மிலி/லி தெளிக்க வேண்டும்.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2018