பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைத்துரு நோய்

நோய் காரணி யூரோமைசிஸ் பிசியோலி டிபிக்கா என்கின்ற பூஞ்சாணத்தினால் தோற்றுவிக்கப்டுகிறது.

நோயின் அறிகுறிகள்

  • பயிரின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் அதிகமாக அளவு இழப்பு ஏற்படுகிறது.
  • நோய் தொற்றிய 8 முதல் 10 நாட்களுக்குள் இலைகளின் அடிப்பாகத்திலும், மேல் பாகத்திலும் ஆரஞ்சு கலந்த துகுப்புள்ளிகளைக் காணலாம்.
  • துருப்புள்ளிகள் நோய் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் செம்பழுப்பு யுரிடோகளைத் தோற்றுவிக்கும்.
  • பாதிக்கப்ட்ட இலைகள் சுருண்டு விடும்.
  • நோய் தாக்கிய இலைகள் காய்ந்து உதிர்ந்து விடுவதால் காய்ப்பு மிகவம் குறைந்து விடுகிறது.

பரவுதல்

  • பூஞ்சான் வித்துகள் காற்றின் மூலம் பரவக்கூடியது.

தடுப்புமுறைகள்

  • எக்டர் ஒன்றுக்கு மான்கோசப் - 1000 கிராம் அல்லது நனையும் கந்தகம் - 2500 கிராம் தெளித்தல்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2019