பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

தண்டு சொறி: மேக்ரோபொமினா பேசோலினா

அறிகுறிகள்

  • நெல்லை தொடர்ந்து, உளுந்து நடவு செய்யும் வயல்களில், வெள்ளை நிற சொறிகள் தண்டின் அடிப்புறத்தில் 4 வாரமான உளுந்து பயிரில் தோன்றும்.
  • இந்த சொறிகள் பெரிதாகி, பழுப்புற்ற கோடுகள் போன்று மேல்நோக்கி பரவும்.
  • பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன், இலைகள் அடர் பச்சை நிறத்தில், பல வண்ண நிறமாக மாறி, அளவு சிறிதாகித் தோன்றும்.
  • தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் திடீரென்று உதிர்ந்து, காயும்.
  • பூத்தல் மற்றும் காய்த்தல் பெரிதளவு குறையும்.

கட்டுப்பாடு

  • கோடையில் ஆழமாக உழவு செய்தல்.
  • பயிர் சுழற்சியை மேற்கொள்ளுதல்
  • பண்ணை எரு 12.5 டன்/ஹெக்டர் என்ற அளவில் இட்டு பண்ணை சீரமைத்தல்.
  • நோய்தாக்கப்பட்ட பயிர்க் குப்பைகளை மண்ணில் புதைத்து எரித்தல்.
  • டிரைக்கோடெர்மா விரிடி 4 கி/கிலோ விதைக்கு (அ) ப.ப்ளோரோசென்ஸ் 10கி/கிலோ விதை (அ) கார்பென்டசிம் அல்லது திரம் 2கி/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • கார்பெண்டசிம் 1 கிராம்/லிட்டர் (அ) ப.ப்ளோரெசன்ஸ்/டி.விரிடி 2.5 கிலோ/ஹெக்டர் + பண்ணை எரு 50 கிலோ என்ற அளவில் குறிப்பிட்ட இடத்தில் அமிழ்த்தி வைக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2018