பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு துளைப்பான் : யூஸோஃபெரா பெர்ட்டிசெல்லா

சேதத்தின் அறிகுறிகள் :

  • இளஞ்செடிகளின் இளங்குருத்து வாடிவதங்கி காணப்படும்
  • பழைய செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • காய் உற்பத்தி தடைப்படும்

பூச்சியின் விபரம் :

  • முட்டை: செதில் போன்று வெண்ணிறத்தில் இருக்கும்
  • புழு: வெண்ணிறத்தில் இருக்கும்
  • பூச்சி: சாம்பல் நிறம் கலந்த பழுப்பு வண்ணத்தில் இருக்கும், முன் இறக்கைகள் மத்தியில் குறுக்குக் கோடுகள் இருக்கும், பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • சேதமடைந்த மற்றும் இறந்த செடிகளை சேகரித்து அழிக்கவும்
  • ஹெக்டேருக்கு ஒரு விளக்குபொறி அமைத்து âச்சிகளை சேகரித்து அழிக்கவும்
  • வேப்பம் எண்ணெய் 2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்
  • செயற்கை ஃபயிரிதிரைடுகள் உபயோகிப்பதை தவிர்க்கவும்
 
சேதத்தின் அறிகுறிகள  
 
பூச்சி புழு  

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016