பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
ஹட்டா / புள்ளி வண்டு : ஹீனோஸ் எபிலாக்னா விஐிங்டியக்டோப்பங்டேட் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகளின் பச்சையம் சுரண்டப்பட்டு சல்லடை போல் இருக்கும்
- செடிகளில் வீரியம் குன்றி, நாளடைவில் காய்ந்து கருகி உதிர்ந்துவிடும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: மஞ்சள் நிறத்தில், சுருட்டு வடிவில் இருக்கும்
- வண்டின் புழு: மஞ்சள் நிறத்தில் தட்டைவடிவில் இருக்கும். உடலின் மீது 6 வரிசையில் கரிய நிறத்தில் முள்போன்ற கிளைத்த ரோமங்களைக் கொண்டிருக்கும்.
- கூட்டுப்புழு: மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலைப்பாகத்தில் முட்கள் இருக்காது. வால்பாகத்தில் முட்கள் இருக்கும்.
- பூச்சி:அரை கோள வடிவில் பாதி பட்டாணிப் பருப்பு போல் மங்கலான பழுப்பு நிற இருக்கைகளின் மீது 14 கரும் புள்ளிகள் இருக்கும்
|
|
|
|
|
இலைகள் சல்லடை போல் மாறுதல் |
பூச்சி |
|
கட்டுப்படுத்தும் முறை:
- இலைகளில் உள்ள வண்டினப்புழுக்களையும், முட்டை கூடுகளையும் சேகரித்து அழிக்கவும்
- செடிகளை உழுக்கி, வண்டினப்புழுக்கள், கூட்டுப்புழு மற்றும் பூச்சிகளை கீழே விழச்செய்து அழிக்கவும்
- பின்வரும் ஏதேனும் ஓரு பூச்சிக்கொல்லியை நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்கார்பரில் 3 கிராம்/லிட்டர் பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்
|
|