பழுப்புத் தத்துப் பூச்சி: செஸ்டியஸ் ஃபசிட்டிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகள் சிறுத்து விடும்
- இலைக் காம்புகள் நீளம் குறைந்துவிடும்
- அளவுக்கு அதிகமான இலைகள், செடியின் நுனிக்குருத்தில் தோன்றி வளர்ச்சிக்குன்றிய செடியாக தோற்றமளிக்கும்
- மலர்கள் இலை போன்ற அமைப்பாக மாறிவிடும்
- செடிகள் புதர் போன்று காட்சியளிக்கும்
- காய்கள் காய்ப்பது அரிது
- “சிற்றிலை (அ) சிறு இலை நோய்” என்னும் மைக்கோபிளாஸ்மா நோய் கடத்திகளாக செயல்படுகின்றன
பூச்சியின் விபரம்:
- பூச்சி: மிகச்சிறிய பழுப்பு நிற தத்திச் செல்லும் பூச்சிகள்
கட்டுப்படுத்தும் முறை:
- நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும்
- நடவுக்கு முன்பு 0.2 சதம் கார்போஃபீரான் 50 STD கைரசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்து நடவு செய்யவேண்டும்.
- டைமீதோயேட் 0.3 சதம் தெளிக்கவேண்டும்
|
|
|
இலைகள் சிறுத்தல் |
|
|
பூச்சி |
இலைகள் சிறுத்தல் |
|