ஆந்த்ராக்நோஸ்: கொலிட்டோடிரைக்கம் மேலோங்கினே
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- பழங்களில் வேறுபட்ட அளவில் மூழ்கிய புண்கள் தோன்றும்
- 1.3 cm அகலம் அளவில் புண்கள் தோன்றி பின்பு ஒன்றாக கூடிவிடும்
- பழுப்பு நிற பூஞ்சை நுண்மங்கள் புண்களில் தோன்றும்
- பழம் காய்ந்த கருப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும்
|
|
|
|
|
|
பொதுமைய வளையங்கள் |
சிதைந்து போன பழம் |
தீவிர தொற்று நோய் |
|
நோய் காரணி:
- மைசீலயம் குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு, கிளைகளுடன் இளஞ்சிவப்பு முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- அசெர்விலை எளிய உருண்டையாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- கோநிடியோஸ்போர்கள்- நிமிர்ந்த மற்றும் கண்ணாடி போன்று இருக்கும்
- கோநிடியோ கண்ணாடி போன்று, ஒரு அணுவை கொண்டு முட்டை அல்லது நீள்சதுர வடிவில் இருக்கும்
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- பாதிக்கப்பட்ட செடிகளில் அசெர்விலையாக உயிர் வாழும்
- மழைத்துளிகள் மூலம் இந்நோய் பரவுகிறது
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- ஈரப்பதம்- 100 %
- வெப்பநிலை- 21 முதல் 29 °C
|
கட்டுப்படுத்தும் முறை:
- சுத்தமான தோட்ட பராமரிப்பு- பாதிக்கப்பட்ட செடி, கொடி கழிவுகளை அழித்தல்
- ச. டோர்வம் போன்ற மாற்று புரவலன் செடியை வளர்க்கவும்
- பழங்களை சரியான நேரத்தில் அறுவடை செயவும்
- பத்து நாட்கள் இடைவெளியில் ஜைனப அல்லது பெர்பாம் தெளித்தல்
|
Source of Images: http://www.infonet-biovision.org/default/ct/116/crops#_1793_903 http://www.extension.umn.edu/garden/diagnose/plant/vegetable/eggplant/fruitspots.html |