ஃபோமோப்சிஸ பழம் அழுகல்: ஃபோமோப்சிஸ் வெக்சன்ஸ்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- முதல் கட்டத்தில் இளம் நாற்றுகள் மீது கருகல் ஏற்படும்
- பூமியின் சற்று மேல் பகுதியில் உள்ள தண்டில், சுற்றிலும் வளையம் தோன்றி, பின்பு சாய்ந்து இறந்துவிடும்.
- தண்டின் புண் அடர் பழுப்பு நிறம் கொண்டு மையப்பகுதியில் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
- இலைகளில் ஒழுங்கற்ற பழுப்பு புள்ளிகள் காணப்படும்
- பழங்கள் மென்மையாக மாறி தண்ணீர் கொண்டு, சிதைவு அடைந்துவிடும்.
- இறுதியாக பழங்கள் கருப்பாகி, சுருங்கி முழுமையாக காய்ந்து விடும். மேற்பரப்பு மீது எக்கச்சக்கமான பிக்நீடியாக்கள் வளரும்.
|
|
|
|
|
|
மென்மையான தண்ணீர் திசு |
தண்ணீரால் சிதைவு |
சுருங்கிய கத்தரிக்காய் |
|
நோய் காரணி:
- பிக்நீடியா இடைவெளி இல்லாமல் பழுப்பு முதல் கருப்பு நிறத்தில் இருக்கும்.
- கோநிடியோஸ்போர்கள்- கண்ணாடி போன்று எளிமையான அல்லது கிளைகளுடன் இருக்கும்
- கோநிடியோ கண்ணாடி போன்று, ஒரு அணுவை கொண்டு உருளை வடிவில் இருக்கும்.
- ச்டைலோஸ்போர்ஸ் நூல் போன்று, வளைந்த, கண்ணாடி போன்று குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு இருக்கும்.
பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:
- விதை மூலம் பரவும்
- மழைத்துளிகள், கருவிகள் மற்றும் பூச்சிகள் மூலம் இந்நோய் பரவுகிறது
- மண்ணில், பாதிக்கப்பட்ட செடிகளின் மூலம் இந்நோய் வாழ்கிறது
நோய் தோன்றும் சூழ்நிலைகள்:
- வெப்பநிலை- 29 °C
- பழங்கள் அழுகல் அதிகபட்ச 25 °C நிலையில் வரும்
|
கட்டுப்படுத்தும் முறை:
- விதை நேர்த்தி- 50°C சூடான நீரில் 30 நிமிடம்
- நாற்றங்கால்- 0.2% டைபோலாட்டன் அல்லது கேப்டன் 0.2% ஒரு வார இடைவெளியில்
- தோட்டங்களில்- ஜைனப 0.2%, போர்டியோக்ஸ் கலவை 0.8%.
|
Source of Images:
https://www.plantvillage.com/en/topics/eggplant/infos/diseases_and_pests_description_uses_propagatio |