பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: கத்தரிக்காய்
பழம் அழுகல்: பைட்டோப்தோரா நிக்கோடியானா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பழங்களில் சிறிய, தண்ணீர் நனைத்த புண்கள் தோன்றும்
  • தோல் - நிறமாற்றம், சாம்பல் கலந்த பழுப்பு நிறமாக மாறும் மற்றும் ஈரப்பதமான காலநிலையில்  வெள்ளை பஞ்சுபோன்ற பூசணம் உருவாகும்.
  • அழுகிய பாகங்கள் வளர்ச்சி குறைந்து சுருங்கி விடும்
  • அழுகல் பழங்களில் ஆழமாக கூழ்கல்லில்  பரவி, பழுப்பு நிறத்தில் மாறி, தண்ணீர கொண்டு மென்மையாக மாறிவிடும்
  • மழை பருவத்தில் வேகமாக பரவுகிறது
 
  தோல் நிறம்மாறுதல் வெள்ளை பஞ்சுபோன்ற பூசணம் அழுகிய கத்தரிக்காய்

நோய் காரணி:

  • ஹைபே- 5 to 6 μm விட்டம்
  • கோள ஹைபே பொதுவாக வீக்கம் அடையும்
  • ஜூஸ்போராஞ்சியா- சற்று கண்ணாடி போன்று, முட்டை போன்று, பேரி-வடிவில் குறுகிய தண்டுகளில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
  • பாதிக்கப்பட்ட பழங்களை அகற்றுதல் மற்றும் அழித்தல்
  • பத்து நாட்கள் இடைவெளியில்  மூன்று முறை டைபோலாட்டன் 0.3% தெளிக்கவும்.
Source of Images:
https://u.osu.edu/wayneipm/files/2014/08/pytophthora-on-eggplant-1hjhsgr.jpg
http://bugwoodcloud.org/images/768x512/1578050.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015